முதல் முறை பெருநகரத்தில் வசிக்க நேர்ந்த பொழுது அன்பினால் சில இன்னல்களுக்கு ஆளானேன். நீ என்ன வேணாலும் செய்யலாம், எப்படி வேணாலும் இருக்கலாம் நான் உன் விஷயத்துல தலையிட மாட்டேன் . நீயும் என் விஷயத்தில் தலையிடக் கூடாது. நான் பிரியப்படும் நேரத்தில் நீ என்னுடன் இருக்க வேண்டும். ஆனால் நீ பிரியப்படும் நேரத்தில் நான் உன்னுடன் இல்லை என்றால் கோபித்துக் கொள்ளக் கூடாது . அப்படி செய்தால் அது அன்பு அல்ல. என் மனதை நீ புரிந்துக் கொள்ள வேண்டும் . ஆனால் நான் அப்படி இல்லை என்றால் கோபித்துக் கொள்ள கூடாது .அப்படி செய்தால் அது அன்பு அல்ல. நான் உன்னிடம் உரிமை எடுத்துக் கொள்வேன். ஆனால் நீ உரிமை எடுத்துக் கொள்ளக் கூடாது. உரிமைக் கோரினால் அது அன்பு அல்ல . "வாய்ஸ் ரீட் பண்ணாத..." "ஃபேஸ் ரீட் பண்ணாத..." இப்படி அறையில் தங்குபவரிலிருந்து வகுப்பில் உடன் படிப்பவர் வரை சொல்லித் திரியும் ஐம்பது பேரையாவது கடந்து வந்திருப்பேன். அவர்களிடம் அன்பாக எவ்வாறு இருப்பதென்று என்னால் புரிந்துக் கொள்ளவே இயலவில்லை. கத்தி மேல் நடப்பது போல் எல்லா சமயங்களிலும் அவர்களின் நிலையைப் புரிந்து நடக்க வேண...