Skip to main content

Posts

Showing posts with the label MOVIE REVIEW

டிராகுலா: எ லவ் டேல்

உலகிலேயே தலைசிறந்த உறவு எது என்று உங்களைக் கேட்டால் எதைக் கூறுவீர்கள்? தாய், தந்தை மூலம் தான் நமக்கு உயிர் கிடைக்கிறது. தம்பி, தங்கை, அக்கா, அண்ணா எல்லாம் நம் இரத்தங்கள். தோழன், தோழிகளெல்லாம் நாம் உருவாக்கிக் கொள்ளும் உறவுகள். எந்த இரத்த சம்பந்தமும் இல்லாமல் அவர்களுடன் பலகாலம் உறவாடுகிறோம். நம்மில் இருந்து உருவாகும் நம் குழந்தைகள் இருக்கிறார்கள். இதையெல்லாந்தாண்டி குரு என்றொருவர் இருக்கிறார். அவர் பெற்ற ஞானத்தையெல்லாம் நமக்கு அளிக்கிறார். இவர்கள் எல்லோருமே நம் வாழ்வில் முக்கியமானவர்கள் தாம். ஆனால், எந்த உறவுக்காக உங்கள் உயிரை தருவீர்கள்? அட, சும்மா பேச்சுக்கெல்லாம் எதையேனும் சொல்லக் கூடாது.  ஜென்ம ஜென்மமா தாய் மகன் உறவு, தந்தைக்காக மகள் கட்டிய பாசக்கோட்டை, அண்ணணுக்காக தன் மூக்கை அறுத்து கொடுத்த தம்பி, தன் நட்பை ஏற்றுக்கொள்ளாத தோழியின் மீது ஆசிட் வீசி கொன்ற தோழன். இப்படியெல்லாம் எங்கேயாவது செய்திகள் வெளியாகி கேட்டுள்ளோமா? எல்லா உறவையும் இயல்பாக ஏற்று, ஒத்துவரும்வரை ஒன்றாக இருந்து, பிடிக்கவில்லையெனில் விலகியோ தூக்கியெறிந்தோ செல்லும் நாம், இந்த எழவெடுத்த காதலில் மட்டும் ஏன் இவ்வளவு ...

காஸ்ட் அவே

பேஸ்புக்கில் ஒருவர் எழுதிய பதிவை வாசித்து, ‘காஸ்ட்‌ அவே’ திரைப்படம் பார்த்தேன். திரைப்படம் எனக்கு‌ப் பிடித்திருந்தது. கடிகாரத்தில் முள்ளாக நேரத்தை துரத்திக் கொண்டிருக்கும் நாயகன் (டாம் ஹேன்க்ஸ்) டெலிவரி நிறுவனமொன்றில் பணிபுரிகிறார். புத்தாண்டின் மாலைக்குள் திரும்பி வருவதாக காதலியிடம் உறுதியளித்துவிட்டு டெலிவரி சம்பந்தமான பிரச்சனை ஒன்றை தீர்க்க மலேசியாவிற்கு விமானத்தில்  செல்கிறார்.  பசிபிக் பெருங்கடலின் மேலே பறந்து கொண்டிருக்கையில் அவ்விமானம் விபத்துக்குள்ளாகி, அவருடன் பயணித்தவர்கள்‌ இறந்து விட, நாயகன் மட்டும் தப்பி ஒரு தீவில் கரை ஒதுங்குகிறான். அதன் பிறகு அத்தீவில் அவனுக்கு என்ன நடக்கிறது, மீண்டும் தன் வீடு திரும்பினானா என்பது தான் கதை. கதையைக் கேட்கவே விறுவிறுப்பாக இருக்கிறதல்லவா, படமும் அப்படித்தான். இரண்டரை மணிநேரம் சென்றதே தெரியவில்லை. படத்தில் எனக்குப் பிடித்த அம்சம் எதையும் மிகையாகக் காட்டாதது தான். படத்தின் முதல் முப்பது நிமிடங்களில் நாயகனின் குணாம்சத்தை விளக்க மிகக் கச்சிதமாகக் காட்சிகளை அமைத்திருந்தனர். படத்தில் நாயகனான டாம் ஹேன்க்ஸின் நடிப்பு‌ பிரமாதமாக இருந்தது. இப...

மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்க்- 2025ல் வாழும் 'யூத்' விஜய்

நீண்ட நாட்கள் கழித்து இன்று ஒரு திரைப்படம் பார்த்தேன். "மிஸ்டர்.ஹவுஸ்கீப்பிங்க்". எதேச்சையாக யூடியூபில் உலவும் போது கண்ணில் பட்டது. காட்சி துணுக்குகளாகவே முழுப்படமும் இருந்தது. இப்படத்தைத் காண என்னைத் தூண்டியது என்னவெனில், நான் பார்த்தது படத்தின் க்ளைமேக்ஸிற்கு முந்தைய காட்சி. படத்தின் நாயகன் புதுமுகம் போலிருந்தார். ஆனால் ஏனோ முதல் பார்வையிலேயே அவரை ஹீரோ என்று மனம் ஒப்புக்கொண்டுவிட்டது. அவரின் நடிப்பு ஒன்றும் ஆஹா ஓஹோ‌ என்றிருந்தது என்று சொல்லவரவில்லை. சில இடங்களில் உணர்ச்சிகளை‌ வெளிக்கொணர திணறினாலும்‌ சில இடங்களில் மிகைநடிப்பாக இருந்தாலும் ஓரளவிற்கு சமாளித்து மொத்த படத்தையும் ஒரு ஹீரோவாக தாங்குகிறார் என்றே‌ எனக்கு தோன்றியது. அவருக்காகவே அத்திரைப்படத்தைப் பார்த்தேன். காமெடி நன்றாகவே வருகிறது அவருக்கு. வரும் காலங்களில் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து, நடிப்பை மேம்படுத்திக் கொண்டால் ஹரிஷ் கல்யான், கவின், ரியோ ராஜ் வரிசையில் வருவார்.  படத்தின் கதை மிகவும் பழைய, எளிமையான கதைதான். கல்லூரி முடித்து வெட்டியாக திரியும் ஹீரோ, அவருக்கொரு காதல், அது நிறைவேறியதா என்பதுதான் கதை. இதற்கிடையில் ...

கொட்டுக்காளி

'கொட்டுக்காளி' டிரெய்லர் பார்த்த போது என்னைப் பெரிதாகக் கவரவில்லை. பொதுவாக ஒரு திரைப்படத்தின் டிரெய்லர் பார்த்து, அந்தப் படம் எனக்கு ஒத்துவர வாய்ப்பிருக்கிறது என்று தோன்றினாலே படத்தை பார்ப்பேன். அதனால் கொட்டுக்காளிக்கு நல்ல விமர்சனங்கள் வந்திருந்தாலும் நான் படத்தை பார்க்கவில்லை. ஆனால் இரண்டு நாட்களாக என்னுடைய யூடியூப் ஃபீட் சும்மா சும்மா வந்து கொட்டுக்காளி சம்மந்தமான காணொளிகளையே காட்டிக்கொண்டிருந்ததால், சரி என்னதான் எடுத்திருக்கிறார்களென்று பார்த்துவிடலாம் என முடிவெடுத்து இன்று மதியம் படத்தைப் பார்த்தேன்.  வித்தியசாமாக ஏதோ முயன்றிருக்கிறார்கள். அவ்வளவே தோன்றியது எனக்கு. உடனே உனக்கு படம் பார்க்க தெரியவில்லை என்று ஓடி வரக்கூடாது. எப்படிப்பட்ட படமாக இருப்பினும் உணர்வுபூர்மாகக் காட்சிகளுடன் நம்மைப் பிணைக்க வேண்டும். அப்பொழுது தான் நம்மால் கதைக்குள் ஒன்ற முடியும். இல்லையெனில், ஏதோ ஓடுது, பார்த்தேன் என்பது போல் தான் இருக்கும். இந்தப் படத்தில் எந்தக் கதாப்பாத்திரத்துடனும் என்னால் ஒன்ற முடியவில்லை. படத்தை நாயகியின் (அன்னா பென்) வழியாகப் பார்ப்பதா, சூரியின் வழியாகப் பார்ப்பதா, இல்லை எதன...

மறுபடியும்

இன்று காலை, ஒரு திரைப்படம் பார்த்தேன். "மறுபடியும்". ஏனோ இந்தப் படத்தைப் பற்றி கொஞ்சம் எழுதலாம் என்று தோன்றியது. 2024ல் இப்படம் வெளியாகியிருந்தால், வரவேற்பை பெற்றிருக்குமா என்று தெரியவில்லை. இன்றைய தேதிக்கு அடித்து தேய்த்த பழைய கதைதான். திருமணத்தைத் தாண்டிய உறவில் இருக்கும் கணவன். மனைவி என்ன செய்கிறாள்? தொலைக்காட்சி தொடர்களில் இந்தக் கதைதான் தினமும் ஓடிக்கொண்டிருக்கிறது. அன்றைய தேதியிலும் பல கமர்ஷியல் படங்களிலும் கூட இதே கதை பலவாறு கையாளப்பட்டிருக்கும். திருமணத்தைத் தாண்டிய ஆண்-பெண் உறவை "சதிலீலாவதி"யில் நகைச்சுவையாகக் கையாண்ட பாலுமகேந்திரா, "மறுபடியும்"ல் ஆழமாகவும் உணர்வுபூர்வமாகவும் கையாண்டுள்ளார்.  1982 ம் ஆண்டு இந்தியில் வெளியான "அர்த்" திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான "மறுபடியும்" 1993 ல் வெளியாகியது. படத்தில் இடம்பெற்றிருக்கும் நடிகை யார்? அந்த இயக்குநர் பாலுமகேந்திரா தானே என்றெல்லாம் கற்பனையை ஓட்டாமல், ஒரு திரைப்படமாக மட்டுமே பார்த்தால் நலம்.  "கவிதா உனக்கொன்னு தெரியுமா? நம்ம சாஸ்தரத்துல சொல்லிருக்கு. பொண்டாட்டிங்கறவ தம் புருஷ...

சித்தா-ஒரு பார்வை

படம் வெளியான சமயத்தில் இருந்தே விமர்சனங்கள் நல்லபடியாக இருந்தமையால் ஒரு ஹைப்பில் ஓடிடியில் ரிலீஸ் ஆனதும் படத்தைப் பார்த்தாச்சு.திரைப்படத்தைப் பற்றி எழுதுவதற்கு திரைப்படக் கலையின் நுணுக்கங்களோ,கதை,திரைக்கதை வடிவமைப்பு போன்றவற்றைப் பற்றிய அறிவெல்லாம் கிடையாது. இத்தனை வருடங்களாக படங்கள் பார்க்கிறோம்,சரியோ தவறோ நமக்குத் தெரிந்ததை எழுதலாம் என்ற துணிவு இப்பொழுதுதான் வந்துள்ளது.அதனால் என் பார்வையில் படம் எப்படி இருந்தது என்று எழுதுகிறேன். விமர்சனங்கள் இருப்பின் கருத்துப்பெட்டியில் தெரிவிக்கலாம். கதை என்ன? பழனி நகராட்சியில் அலுவலராகப் பணியாற்றும் சித்தார்த்(ஈஸ்வரன்) இறந்த தன் அண்ணனின் மகள்,அண்ணியுடன் வசித்து வருகிறார்.தூய்மைப் பணியாளராகப் பணியாற்றும் நாயகிக்கும்(சக்தி) சித்தார்த்துக்கும் பள்ளிப் பருவத்தில் இருந்து காதல்.இடையில் ஒரு பிரிவு ஏற்பட்டிருந்ததற்கு ஒரு முன்கதை இருப்பதாகக் காட்டப்படுகிறது.தன் நெருங்கிய நண்பனின் அக்கா மகள்(பொன்னி) பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக,அந்தப் பழி சித்தார்த்தின் மீது விழுகிறது.அதனைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களும் சித்தார்த் எடுக்கும் முடிவுகளுமே கதை. பிடித்த விஷயங...

இன்செப்ஷன்-ஒரு பார்வை

கனவு, கனவுக்குள் கனவு ,அந்தக் கனவுகள் கனவு என கனவினூடே பயணித்து கனவைக் களவாடி,கனவிற்குள் மாட்டி, அதிலிருந்து தப்பித்து,கனவுக்குள் விதைத்து என கனவை வைத்து நாயகனும் அவன் கூட்டாளிகளும் ஆடும் களியாட்டமே இன்செப்ஷன். இந்தக் கதையை ஒரு நேர்க்கோட்டில் புரிந்துக் கொள்வது கடினம். நாயகன் விளக்கும் கனவுக் கோட்பாடுகளை அவன் விவரணையிலேயே நூல் பிடித்துச் சென்றால் மட்டுமே ஓரளவிற்குச் சரியாகக் கதையைப் புரிந்து கொள்ள இயலும்.அதிலிருந்து கொஞ்சம் விலகினாலும் தூக்கத்திலிருந்து விழித்த பின், கனவில் என்ன கண்டோம், எங்கு இருந்தோம் என்று காட்சிகள் மங்கி நிகழ்காலத்தில் சிக்கிக் கொள்வது போல்,நாயகனின் இன்செப்ஷன் கோட்பாட்டைச் சரியாகப் பின் தொடர முடியாமல் நாமும், இது எந்தக் கனவு, கனவுக்குள் கனவா? என்று அவன் கனவுலகிற்குள் சிக்கிக் கொள்வோம். ஓர் இயற்பியல் பாடத்தைப் படிக்க ஆரம்பிக்கும் முன் அதன் அடிப்படைக் கோட்பாடுகளை தெளிவாகப் படித்தல் அவசியம் .ஏனெனில்,அதையொட்டி தான் அந்தப் பாடமே மேற்கொண்டுச் செல்லப் போகிறது. அதுபோல,படத்தின் ஆரம்பக் காட்சிகளைச் சரியாகப்புரிந்துக் கொண்டால்,கனவுலகில் பயணிக்க நாமும் தயாராகி விடலாம். கோட்பாட...