Skip to main content

About

யார்ரா இது:

என் பெயர் த. செந்தமிழ். பிறந்தது, வளர்ந்தது, வாழ்ந்துக் கொண்டிருப்பது எல்லாம் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி. முதுநிலை இயற்பியல் படித்துவிட்டு தமிழ்நாட்டின் பல லட்சம் இளைஞர்களைப் போலவே பிடித்தோ, பிடிக்காமலோ, வருடங்களை ஓட்டுவதற்கோ இல்லை எதற்கே என்று தெரியாமல் நானும் TNPSC தேர்வுகளுக்குத் தயாராகி வருகிறேன். இதுபோதும் என்று நினைக்கிறேன். 

ப்ளாக் ஆரம்பித்ததற்குக் காரணம்:

சரியோ தவறோ நினைப்பதைக் கிறுக்குவதற்கு ஓர் இடம் கிடைத்திருக்கிறது. நல்லா இருந்தா முடிஞ்சா நாலு நல்ல வார்த்தை பதியவும். நல்லா இல்லனா, தப்பா இருந்தா அதைக் கழுவி ஊத்தவும், சரி செய்யவும், விவாதம் பண்ணவும் இங்கு இடமுண்டு. 

வாழ்க்கை தத்துவம்: 

வாழ்க்கைல எல்லாமே அரகொறதா. எல்லாத்தயும் நல்லது, கெட்டது, புடிச்சிருக்கு, புடிக்கல, வேணும், வேணாம்னு அறுதியிட்டு சொல்ல முடியாது. அப்பப்ப அந்தந்த சமயத்துல எது சரின்னு படுதோ அத பண்ணிட்டு போறோம். அது என்னவா வேணா மாறலாம். முழுசா எதுவும் எப்பவும் நம்மளோட இல்லாததுனால எல்லாமே, "இருக்கு..ஆனா இல்ல..."

தொடர்புக்கு:

sentamilvanan2000@gmail.com 

Comments

Popular posts from this blog

அ-காலம்- சாரு நிவேதிதா

சமகால அரபி இலக்கியம் குறித்து, 2021-ம் ஆண்டு, பிஞ்ச் செயலியில் சாரு நிவேதிதா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சாருவின் லெபனான் பயணத்தின் அனுபவக் கட்டுரைகளாக ஆரம்பித்து, இஸ்ரேல், சிரியா, பாலஸ்தீனம், அல்ஜீரியா, ஈராக், சவுதி,  எகிப்து என பல மத்திய தரைக்கடல் நாடுகளின் கலாச்சாரம், இசை, இலக்கியம் வழியாகப் பயணித்து ஒட்டுமொத்த அரேபிய வாழ்வின் சித்திரத்தை வரைந்துக் காட்டியிருக்கிறது இந்நூல்.  மனித குலம் தோன்றியதிலிருந்தே மறதி ஒரு பெரும் நோயாக இருந்திருக்கும் போல. அதனால் தான் பாறைகளில் கீற்றோவியங்கள் வரைந்து, மாபெரும் கட்டிடங்கள் எழுப்பி, பொதுவில் சிலைகள் வைத்து சில விஷயங்களை நினைவூட்டிக்கொள்ள முயன்றிருக்கிறான் மனிதன். பெய்ரூத்திலிருக்கும் குண்டுகள் துளைத்த கட்டிடங்கள், இன்னும் நூறு ஆண்டுகளுக்காவது லெபனானின் வன்முறை சுவடுகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். அதுவே அம்மக்களை இன்று அமைதி வழியில் தமது உரிமைகளுக்காகப் போராட வைத்திருக்கிறது.  கடவுளின் இருப்பு குறித்தான சந்தேகம் இந்நூலை வாசித்த பொழுது அதிகரித்தது. வாழ்க்கையே ஒரு போராட்டமாக, சாபமாக, உயிர்பிழைத்திருப்பதே பூர்வஜென்ம புண்...

வாராணசி - பா. வெங்கடேசன்

  பா. வெங்கடேசனின் 'வாராணசி' வாசித்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தோழி ஒருத்திக்கு வித்தியாசமாக ஏதாவதொரு நாவல் பரிசளிக்கலாமென்று தேடி பா. வெ வின்  'ராஜன் மகள்' வாங்கினேன். வாசித்துவிட்டு இனிமேல் இந்த ஆளுடைய நூல்கள் எதையுமே வாசிக்கக் கூடாதென்ற முடிவில் இருந்தேன். காரணம், நீருக்குள் முழ்கி ரோலர் கோஸ்டர் செல்வதாக இருந்த அவருடைய மொழிநடை. பித்துப்பிடித்துவிடுமே என்று அஞ்சி விலகியிருந்த நான் விதிவசத்தால் நான்கு நாட்களுக்கு முன்னர், வித்தியாசமாக ஏதாவது படிக்கலாமென்ற ஆர்வத்தில் மறுபடியும் ஒரு தற்கொலை முயற்சியாக 'வாராணசி' யை எடுத்துவிட்டேன். படித்தும் முடித்துவிட்டேன். அதைப்பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. பா. வெ வின் மொழிநடையில் சொற்கள் ஒரு சுழல் போன்று சுழல்பவை. கொஞ்சம் பிசகினாலும் அந்த மீளாச்சுழலில் சிக்கி நம்மை பிறழ்வுக்குட்படுத்துபவை.  சொற்களைப் பின்தொடர்ந்து செல்வதென்பது, படபடத்துக்கொண்டிருக்கும் ஒரு பட்டாம்பூச்சியைப் பின்தொடர்ந்து, மனிதத்தடம் படாத அடர்வனத்துக்குள் சிக்கி திரும்பிச் செல்ல வழி தெரியாமல் பீதியில் கலங்கி நிற்கும் சிறுவனின் நிலையைப் போன்றது. பா. ...

படித்துதான் ஆகணுமா?- ஆர். அபிலாஷ்

  ஆர்.‌ அபிலாஷின் கல்வி சார்ந்த கட்டுரைகள் எனக்கு மிகவும் விருப்பமானவை. ஒரு கல்வியாளராக சமூகத்தின் பொதுப்புத்தியிலிருந்து விலகி நடைமுறை சார்ந்தும் தத்துவார்த்தமாகவும் கல்வி குறித்து அவர் வைக்கும் வாதங்கள் முக்கியமானவை. தமிழகத்தில், கல்வி குறித்தான விவாதங்களில், அதன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை வாதங்களாக எதிர்கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு எதிர்தரப்பினர் செய்யும் ரொமாண்டிஸைஸத்துக்குப் பின்னால் இருக்கும் காரணங்களை ஆராய்வதும் கேள்விக்குள்ளாக்குவதன் அவசியங்களைக் கூறுவதுமே இந்நூலின் சாராம்சம்.  ஆங்கில ஹிந்துவில் வெளியான நடுப்பக்கக் கட்டுரை ஒன்றை முன்வைத்து கல்வி எவ்வாறு பணத்தைக் கடந்த அதிகார மதிப்பை கொண்டுள்ளது, தேர்வுமுறைக்கும் சாதி அதிகாரத்திற்கும் இருக்கும் தொடர்பு, அதன் பொருட்டு ஏன் மக்களால் கல்வி பட்டங்களைப் பெறுவதில் இருந்து தப்பிக்க இயலாது என்று விளக்கியிருக்கும் ‘கல்விப் பண்ணைகளால் உருவான புதிய இந்தியா’ கட்டுரை முக்கியமானது.   கல்வி என்பது நிச்சயமாக இன்று வியாபாரம் தான். கல்வி இலவசமாக இருந்த பொழுது இல்லாத பிரச்சனை இப்பொழுது என்னவெனில், இத்தனை லட்சங்களைச் செலவழித்...