Skip to main content

Posts

Showing posts with the label GENERAL

கந்தகோட்டம்

சென்னை‌ பாரிமுனையில் அமைந்துள்ள கந்தகோட்டம் முத்துக்குமாரசுவாமி ஆலயத்திற்குச் சென்றிருந்தேன். நீண்ட நாளைய திட்டமெல்லாம் இல்லை. சென்னையில் இருக்கிறேன். அரைமணிநேரப் பயண தூரத்தில் இருக்கிறது. எப்பொழுதும் போல் இன்றும் ‘திடீரென்று’ தோன்றியதால் உடனே சென்றுவிட்டேன். இவ்வாலயம் குறித்து நான் அறிந்திருந்ததெல்லாம், இராமலிங்க அடிகளார், தன் ஒன்பதாம் அகவையில் முருகனால் ஆட்கொள்ளப்பட்டு தெய்வமணிமாலையை இயற்றியது இத்தளத்தில் தான். அச்செய்தி,  இக்கோவிலுக்குச் செல்வதில் ஒரு ஆவலை உண்டுபண்ணியிருந்தது.  இரவே இத்தளத்தைக் குறித்து கொஞ்சம் படித்து மனதில் கற்பனைகளை வளர்த்திருந்தேன். காலையில், சென்னை மத்திய இரயில் நிலையத்திலிருந்து 'கூகுள் மேப்ஸ்' போட்டு சுற்றும்முற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நடக்கலானேன். வழியிலெங்கும் சிறு சிறு இரும்புக் கடைகள், பாத்திரக் கடைகளாய் இருந்தன. கோவிலை நெருங்க நெருங்க சில செம்பிலான கலை வேலைப்பாடுகள் நிறைந்த பொருட்கள், பூஜை பொருட்கள் விற்கும் கடைகள் தென்பட்டன. கோவில் உள்ள தெருவென்று, மக்கள் சாலையை அங்கப்பிரதட்சண பாதை போலவா வைத்திருப்பார்கள். சென்னையின் இதர வழக்கமான முகம்ச...

நான் ஏன் என்னை ஜார்ஜாக உணர்ந்தேன்?

கடந்த வாரத்தில், ஓர் இரவில் மென்மையான இசை கேட்கும் ஆவலில் எஸ்தாஸ் தோனேவின் "13 Songs of Truth" ஆல்பம் கேட்க ஆரம்பித்து, அது "பிரேமம்" படத்தின்  பின்னணி இசைக்கோர்வையான "Unfinished Hope" ற்கு கொண்டு போய் விட்டது. அது எப்பொழுதும் போல் என்னுடைய பத்தாம் வகுப்பு நினைவுகளைக் கிளர்த்திவிட்டது. உடனே எனக்கு பிரேமம் படத்தை மறுபடியும் பார்க்க வேண்டும் என்ற உந்துதல் வந்து அன்றிரவே பார்த்தும் விட்டேன். அநேகமாக அப்படத்தை அன்று நான் பார்த்தது இருபதாவது முறையாக இருக்கலாம். அல்லது அதற்கு மேலாகக்கூட இருக்கலாம். இரவு நான் தூங்கச் சென்ற போது மணி பதினொன்று. இன்னும் எனக்கு தெளிவாக நினைவிலிருக்கிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுக்கு முந்தைய நாளிரவு, ஏதோவொரு லோக்கல் சேனலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிரேமம் படத்தை, தேர்வு முடிவுகள் குறித்த பயத்தை போக்கிக் கொள்வதற்காக பத்தரை மணிவரை உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். பிரேமம் படத்திற்கும் எனக்கும் இரவிற்கும் ஏதோ சம்மந்தம் இருக்கும் போல. முதன்முதலில் அப்படத்தைப் நான் பார்த்ததுகூட லேசாகத் தூறிக்கொண்டிருந்த ஒரு இரவு வேளையில்...

முதல் ரயில் பயணம்

  கல்லூரி முடிக்கும் வரை தனியாகப் பேருந்து கூட ஏறியதில்லை. பக்கத்து தெருவிற்குச்  செல்வதனால் கூட உடன் யாரேனும் துணைக்கு வருவர். முதல் முறை தனியாகப் பயணம் செய்ய ஆசை வந்தது. கடந்த ஆண்டு எஸ்.எஸ்.சி தேர்விற்கான தேர்வு மையம் கோவையில்  அமைந்தது. வீட்டில் அனுமதி வாங்கச் சரியானக் காரணமாக அமைந்தது. ரயிலில் பயணம் செய்யலாம் என்று முடிவெடுத்தேன். அதற்கு முன்னர் ரயிலில் பயணித்ததில்லை. பயணச்சீட்டு முன்பதிவிலிருந்து எங்கு நிற்க வேண்டும், எங்கே இறங்க வேண்டும் என்பது வரை தோழிதான் பார்த்துக் கொண்டாள்.  தனியாகப் பயணித்தால் எப்படியிருக்கும் என்ற ஆர்வத்துடன்  ஆரம்பித்தது, என்னுடைய சேலம் - கோவை, 3 மணி நேர ரயில் பயணம் . எதையாவது அறிவித்துக் கொண்டிருக்கும் ஒலிபெருக்கி,  திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்குச் செல்லும் குடும்பத்தினர், வந்து நிற்கும்  ரயில்களில் , ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கும் வட மாநிலத்தவர்கள், 'ச்சாய்', 'சம்சே' என்று கூவிக்கொண்டே கூட்டத்தில்  லாவகமாக  உள்ளே சென்று வெளியே வரும் விற்பனையாளர்கள்,  தினசரி பயணம் மேற்கொள்ளும் அலுவலர்கள் , ரீல்ஸ் ...

ஸ்பாடிஃபை எனும் அரக்கன்

இனிமே நெக்ஸ்ட் பட்டன அழுத்த முடியாது,  ப்ளேபேக் ஆப்ஷன் கிடையாது, ப்ளேலிஸ்ட ஷஃபுள் பண்ண முடியாது, அது பாட்ற ஆடர்ல தான் பாட்டு கேட்க முடியும். இப்படியெல்லாம் ஒரு நாள் நம் திறன்பேசியின் திரையில் தோன்றும் போது தான், ஒரு இசை செயலிக்கு எவ்வளவு அடிமையாகிக் கிடக்கிறோம் என்றே உணரத் தொடங்கினோம்.  ஸ்பாடிஃபைக்கு முன்னால் பாடல்களை எப்படி கேட்டோம்? 90'ஸ் கிட்டுகளைக் கேட்டால் டேப்ரெக்கார்டர், டிவிடி ப்ளேயர் என்று ஆரம்பித்து ஏகப்பட்ட சாதனங்களை லிஸ்ட் போடுவார்கள் என்பதால் டுகே கிட்டுகளிடம் நேராகச் சென்று விடலாம். பல டுகே கிட்டுகளுக்கு முதன் முதலில் பாடல்களைக் கேட்ட அனுபவம் தொலைக்காட்சியிலேயே இருந்திருக்கும். மெமரி கார்டுகள் போட்டுக்கொள்ளும் வசதியுள்ள செல்பேசிகளின் வருகைக்குப் பிறகு இளையராஜா ஹிட்ஸ், ரஹ்மான் ஹிட்ஸ் என்று மொத்தமாக ஏற்றி பாடல்களைக் கேட்கத் தொடங்கினோம்.செல்பேசியிலேயே பாடல்களைக் கேட்கும் வசதி இருந்ததால் பாடல்களைக் கேட்பதற்கென்று தனி சாதனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. டிவிடிகளும் பென்ட்ரைவாகச் சுருங்கின.  திறன்பேசிகளின் வருகைக்குப் பிறகு திருட்டுத்தனமாக பாடல்க...

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளும் 2018 தேர்தல் நினைவுகளும்

  ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகி நாடே பரபரப்பில் இருக்க, 'மிக்ஜாம்' புயல் சென்னையைத் தாக்கி ஒரு நாள் கூச்சலோடு, தமிழக ஊடகங்களை திசை திருப்பிவிட்டது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு வரும் மாநில தேர்தல்களை அரையிறுதி என்று சொல்லி அரசியல் நோக்கர்கள், ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே கட்டுரைகள் எழுதத் தொடங்குவதும் காட்சி ஊடகங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்து விவாதங்கள் வைத்து கத்தத் தொடங்குவதும் வழக்கம். தினமும் நாளிதழ்களைப் புரட்டும் பொழுதும், செய்தி சேனல்களை மாற்றும் பொழுதும், ''நாட்ல எலக்‌ஷனத் தவர வேற எதுவுமே நடக்கலயா? வேற ஏதாச்ச இருந்தா காட்டுங்கப்பா'' என்று தான் சலிப்பு தட்டும். அதனால், இந்த முறை தேர்தல் செய்திகள், கட்டுரைகள், அலசல்கள் என்று எதுவும் பார்க்காமல் நேரடியாக முடிவுகளுக்குப் பிறகு படித்துக் கொள்ளலாம் என்று முடிந்தவரை தவிர்த்திருக்கிறேன். இது, தேர்தலுக்கு முன்பு வரை எந்த வாய் என்னவெல்லாம் உருட்டியிருக்கிறது என்பதைத் தெரிந்துக் கொள்ளவும் உதவும் என்று நம்பினேன். ஊடகப் பரபரப்புகளுக்குள் செல்லாமல் இந்த தேர்தலை நோக்கிய என் அனுபவங்களையும் 2018ம்...