உலகம் முழுக்க வசூலில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிக்கும் “அப்செஷன்” திரைப்படத்தைக் காண பலரைப் போலவே நானும் ஆவலாய்க் காத்திருந்தேன். பலர் திரைப்படம் நன்றாக இருக்கிறது என்று கூறியதால் மட்டுமில்லை, திரைப்படத்தின் முன்னோட்டமும் என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தது. ஓர் இனிய பொழுதில் அப்படத்தைப் பார்த்தும் விட்டேன். படத்தைக் குறித்த என் கருத்துக்களை இனி காணலாம். அப்செஷனின் நாயகன் என்ன பெரிதாக ஆசைப்பட்டுவிட்டான். தன் காதலி இந்த உலகில் வேறெவர் மீதும் இல்லாத அளவிற்கு தன் மீது அன்பைப் பொழிய வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அவ்வளவுதான். ஆசைகளை நிறைவேற்றித் தரும் பொம்மை ஒன்று அவனுக்குக் கிடைக்க, அவனும் வேண்டிக் கொள்கிறான். அதற்கு பிறகு என்றாகிறது என்பது தான் மீதிக்கதை. இந்த ஒரு வரிக்கதை போதாதா, படம் சுவாரசியமாகச் செல்வதற்கு. ஆனால் அப்படி நிகழ்ந்ததா என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்வேன். படத்தின் ஒருவரிக் கதை சுவாரசியமானது தான். ஆனால் திரைக்கதையிலும் அதனை படமாக்கிய விதத்திலும் சொதப்பி விட்டார்கள். இந்த ஒருவரிக் கதையை இரண்டு விதமாக விரித்து எழுதியிருக்கலாம். ஒன்று. அடிப்படையில் இது ஒ...
என்ன பாத்து யாருமே அப்பிடி சொன்னதில்ல. நீதான் மொத தடவ அப்பிடிலாம் சொல்ற. எனக்கு எவ்ளோ ஹர்டிங்கா இருக்கு தெரியுமா? ........ சொல்ல போனா, உன் ப்ராப்ளம் என்ன தெரியுமா? உன்ன மாதிரியே மத்தவங்கள மாத்த ட்ரை பண்றது. உலகத்துல இருக்க ஒவ்வொரு ஜீவராசியும் யுனிக்கானது. ஒருத்தங்க மாதிரியே இன்னொருத்தங்க இருந்துட்டா உலகம் என்னாகுறது? நீ என்ன மாத்த ட்ரை பண்ற. இல்ல, நான் உன்ன மாத்தலாம் எதும் ட்ரை பண்ல. நான்…. நோ நோ. நீ அதான் பண்ற. என்ன மாதிரி உன்ன மாற சொன்னா உன்னால அது முடியுமா? என் கழுத்த புடிச்சு யாரோ நெறிக்கற மாதிரியே இருக்கு எப்பவும். யூ நோ, ஹௌ ஸ்ட்ரெஸ்ஃபுல் இட் இஸ்? நீ சின்ன விஷயத்த பெருசு பண்ற. நான் சொன்னது எல்லாமே ரொம்ப சாதாரண விஷயங்க. அத எதுக்கு இவ்ளோ டீப்பா உன் மைன்ட்கு…. ப்ளீஸ். எது சின்ன விஷயம்? உனக்கு புரியுதா இல்லையா? நான் ரொம்ப பொறுமையா பேசிட்ருக்கேன். நான் நானா இருக்க முடியல இந்த ரூம்ல. ஏய். இது ரொம்ப பெரிய கம்ப்ளெய்ன்ட் என் மேல. எல்லாம் ஓ.கே. இது வர நடந்தது எல்லாம் கூட ஒரு வகைல என் நல்லதுக்கு தான் நீ சொன்னன்னு எடுத்துக்குறேன். ஆனா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்தது...