Skip to main content

Posts

Showing posts with the label MOVIES

டிராகுலா: எ லவ் டேல்

உலகிலேயே தலைசிறந்த உறவு எது என்று உங்களைக் கேட்டால் எதைக் கூறுவீர்கள்? தாய், தந்தை மூலம் தான் நமக்கு உயிர் கிடைக்கிறது. தம்பி, தங்கை, அக்கா, அண்ணா எல்லாம் நம் இரத்தங்கள். தோழன், தோழிகளெல்லாம் நாம் உருவாக்கிக் கொள்ளும் உறவுகள். எந்த இரத்த சம்பந்தமும் இல்லாமல் அவர்களுடன் பலகாலம் உறவாடுகிறோம். நம்மில் இருந்து உருவாகும் நம் குழந்தைகள் இருக்கிறார்கள். இதையெல்லாந்தாண்டி குரு என்றொருவர் இருக்கிறார். அவர் பெற்ற ஞானத்தையெல்லாம் நமக்கு அளிக்கிறார். இவர்கள் எல்லோருமே நம் வாழ்வில் முக்கியமானவர்கள் தாம். ஆனால், எந்த உறவுக்காக உங்கள் உயிரை தருவீர்கள்? அட, சும்மா பேச்சுக்கெல்லாம் எதையேனும் சொல்லக் கூடாது.  ஜென்ம ஜென்மமா தாய் மகன் உறவு, தந்தைக்காக மகள் கட்டிய பாசக்கோட்டை, அண்ணணுக்காக தன் மூக்கை அறுத்து கொடுத்த தம்பி, தன் நட்பை ஏற்றுக்கொள்ளாத தோழியின் மீது ஆசிட் வீசி கொன்ற தோழன். இப்படியெல்லாம் எங்கேயாவது செய்திகள் வெளியாகி கேட்டுள்ளோமா? எல்லா உறவையும் இயல்பாக ஏற்று, ஒத்துவரும்வரை ஒன்றாக இருந்து, பிடிக்கவில்லையெனில் விலகியோ தூக்கியெறிந்தோ செல்லும் நாம், இந்த எழவெடுத்த காதலில் மட்டும் ஏன் இவ்வளவு ...

காஸ்ட் அவே

பேஸ்புக்கில் ஒருவர் எழுதிய பதிவை வாசித்து, ‘காஸ்ட்‌ அவே’ திரைப்படம் பார்த்தேன். திரைப்படம் எனக்கு‌ப் பிடித்திருந்தது. கடிகாரத்தில் முள்ளாக நேரத்தை துரத்திக் கொண்டிருக்கும் நாயகன் (டாம் ஹேன்க்ஸ்) டெலிவரி நிறுவனமொன்றில் பணிபுரிகிறார். புத்தாண்டின் மாலைக்குள் திரும்பி வருவதாக காதலியிடம் உறுதியளித்துவிட்டு டெலிவரி சம்பந்தமான பிரச்சனை ஒன்றை தீர்க்க மலேசியாவிற்கு விமானத்தில்  செல்கிறார்.  பசிபிக் பெருங்கடலின் மேலே பறந்து கொண்டிருக்கையில் அவ்விமானம் விபத்துக்குள்ளாகி, அவருடன் பயணித்தவர்கள்‌ இறந்து விட, நாயகன் மட்டும் தப்பி ஒரு தீவில் கரை ஒதுங்குகிறான். அதன் பிறகு அத்தீவில் அவனுக்கு என்ன நடக்கிறது, மீண்டும் தன் வீடு திரும்பினானா என்பது தான் கதை. கதையைக் கேட்கவே விறுவிறுப்பாக இருக்கிறதல்லவா, படமும் அப்படித்தான். இரண்டரை மணிநேரம் சென்றதே தெரியவில்லை. படத்தில் எனக்குப் பிடித்த அம்சம் எதையும் மிகையாகக் காட்டாதது தான். படத்தின் முதல் முப்பது நிமிடங்களில் நாயகனின் குணாம்சத்தை விளக்க மிகக் கச்சிதமாகக் காட்சிகளை அமைத்திருந்தனர். படத்தில் நாயகனான டாம் ஹேன்க்ஸின் நடிப்பு‌ பிரமாதமாக இருந்தது. இப...

மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்க்- 2025ல் வாழும் 'யூத்' விஜய்

நீண்ட நாட்கள் கழித்து இன்று ஒரு திரைப்படம் பார்த்தேன். "மிஸ்டர்.ஹவுஸ்கீப்பிங்க்". எதேச்சையாக யூடியூபில் உலவும் போது கண்ணில் பட்டது. காட்சி துணுக்குகளாகவே முழுப்படமும் இருந்தது. இப்படத்தைத் காண என்னைத் தூண்டியது என்னவெனில், நான் பார்த்தது படத்தின் க்ளைமேக்ஸிற்கு முந்தைய காட்சி. படத்தின் நாயகன் புதுமுகம் போலிருந்தார். ஆனால் ஏனோ முதல் பார்வையிலேயே அவரை ஹீரோ என்று மனம் ஒப்புக்கொண்டுவிட்டது. அவரின் நடிப்பு ஒன்றும் ஆஹா ஓஹோ‌ என்றிருந்தது என்று சொல்லவரவில்லை. சில இடங்களில் உணர்ச்சிகளை‌ வெளிக்கொணர திணறினாலும்‌ சில இடங்களில் மிகைநடிப்பாக இருந்தாலும் ஓரளவிற்கு சமாளித்து மொத்த படத்தையும் ஒரு ஹீரோவாக தாங்குகிறார் என்றே‌ எனக்கு தோன்றியது. அவருக்காகவே அத்திரைப்படத்தைப் பார்த்தேன். காமெடி நன்றாகவே வருகிறது அவருக்கு. வரும் காலங்களில் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து, நடிப்பை மேம்படுத்திக் கொண்டால் ஹரிஷ் கல்யான், கவின், ரியோ ராஜ் வரிசையில் வருவார்.  படத்தின் கதை மிகவும் பழைய, எளிமையான கதைதான். கல்லூரி முடித்து வெட்டியாக திரியும் ஹீரோ, அவருக்கொரு காதல், அது நிறைவேறியதா என்பதுதான் கதை. இதற்கிடையில் ...

நான் ஏன் என்னை ஜார்ஜாக உணர்ந்தேன்?

கடந்த வாரத்தில், ஓர் இரவில் மென்மையான இசை கேட்கும் ஆவலில் எஸ்தாஸ் தோனேவின் "13 Songs of Truth" ஆல்பம் கேட்க ஆரம்பித்து, அது "பிரேமம்" படத்தின்  பின்னணி இசைக்கோர்வையான "Unfinished Hope" ற்கு கொண்டு போய் விட்டது. அது எப்பொழுதும் போல் என்னுடைய பத்தாம் வகுப்பு நினைவுகளைக் கிளர்த்திவிட்டது. உடனே எனக்கு பிரேமம் படத்தை மறுபடியும் பார்க்க வேண்டும் என்ற உந்துதல் வந்து அன்றிரவே பார்த்தும் விட்டேன். அநேகமாக அப்படத்தை அன்று நான் பார்த்தது இருபதாவது முறையாக இருக்கலாம். அல்லது அதற்கு மேலாகக்கூட இருக்கலாம். இரவு நான் தூங்கச் சென்ற போது மணி பதினொன்று. இன்னும் எனக்கு தெளிவாக நினைவிலிருக்கிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுக்கு முந்தைய நாளிரவு, ஏதோவொரு லோக்கல் சேனலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிரேமம் படத்தை, தேர்வு முடிவுகள் குறித்த பயத்தை போக்கிக் கொள்வதற்காக பத்தரை மணிவரை உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். பிரேமம் படத்திற்கும் எனக்கும் இரவிற்கும் ஏதோ சம்மந்தம் இருக்கும் போல. முதன்முதலில் அப்படத்தைப் நான் பார்த்ததுகூட லேசாகத் தூறிக்கொண்டிருந்த ஒரு இரவு வேளையில்...