அராத்துவின் எழுத்தில், "பொண்டாட்டி", "பிரேக்கப் குறுங்கதைகள்" இரண்டும் எனக்கு மிகவும் பிடித்தவை. "பொண்டாட்டி" பெண்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருந்தது. பொண்டாட்டினா என்ன, ஒரு ஆம்பளைக்கு பொண்டாட்டின்றவ யாரு, பொண்டாட்டின்ற கதாப்பாத்திரத்துக்கு இந்த சமூகத்துல என்ன பிம்பம் இருக்கு என்பது போன்ற முக்கியமான கேள்விகளை அது முன்வைத்திருக்கும். பெண் கதாப்பாத்திரங்களைச் சிறப்பாக எழுதும் ஆண் எழுத்தாளர்களை, ஒரு பெண்ணா உருமாறி எழுதிருக்காரு, பெண்ணுடல்ல ஊடுருவி எழுதிருக்காரு என்றெல்லாம் பலர் சொல்லுவர். அதிலெல்லாம் எனக்கு பெரிய நம்பிக்கையில்லாமல் இருந்தது. புருஷனை வாசித்துவிட்டு இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் தகர்ந்துவிட்டது. இப்பொழுது யோசித்தால், பொண்டாட்டி, அரைகுறையாக பெண் வேடமணிந்த ஆண் எழுதியது. புருஷன், முழுக்க முழுக்க எந்த ஒப்பனையும் இல்லாத ஒரு ஆண் எழுதியது. அதனால் தான் பொண்டாட்டியை விட பல மடங்கு சிறப்பாக புருஷன் வந்துள்ளது. நாவல் குறித்த சாரு நிவேதிதாவின் உரையைக் கேட்டுவிட்டு புருஷனை வாசித்த பொழுது பல விஷயங்களை கூடுதலாக உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. பின்நவீனத்துவம்,...