Skip to main content

Posts

Showing posts from February, 2026

Minxie- Araathu

  ‘Minxie’ கிண்டில் பதிப்பாக வந்தபொழுது, ஆங்கிலத்தில் வாசிக்க சற்று தயக்கம் இருந்ததால் தமிழில் வெளியானதும் வாசிக்கலாம் என்றிருந்தேன். ‘குட்டிமா’ வெளியானதும் கிண்டிலில் சில அத்தியாயங்கள் வாசித்தேன். அராத்துவின் எழுத்தில் எனக்கு இருக்கும் சிக்கல் என்னவென்றால், அவரின் தமிழ் தான். கதையின் உள்ளடக்கத்திலும் கதைசொல்லலிலும் குறை வைப்பதில்லை. ‘ஓப்பன் பண்ணா’ நாவல், கதையாக சுவாரசியமாகவே ஆரம்பித்தது. ஆனால் அதன் மொழிநடை தொடர்ந்து வாசிக்க பெரிய தடையாக இருந்தது. குட்டிமாவிலும் அதே சிக்கல். (பிற நூல்களில் இப்பிரச்சினை எனக்கில்லை). அதனால் ஆங்கிலத்தில் முயற்சிக்கலாம் என்று ‘Minxie’ வாசித்தேன். ஆரம்பகட்ட வாசகர்களும் புரிந்து கொள்ளும்படியாக எளிதாகவே இருந்தது. இதுதான் நான் ஆங்கிலத்தில் வாசிக்கும் முதல் நாவலும்.  சிந்து எனும் சிறுமி வீணாவாக, வஞ்சியாக பரிணமிக்கும் கதைதான் ‘Minxie’. நாவலைக் கையில் எடுத்தால் முழுமையாக வாசித்து முடித்துவிட்டு தான் கீழே வைக்க முடியும். ராக்கெட் வேகத்தில் எங்கும் தொய்வில்லாமல் கதை பறக்கிறது. நாயகி, தனக்குள் அவ்வபோது நடத்தும் உரையாடல்களுக்கு பின்னாலுள்ள உளவியல் காரணியைச்...