இனிமே நெக்ஸ்ட் பட்டன அழுத்த முடியாது, ப்ளேபேக் ஆப்ஷன் கிடையாது, ப்ளேலிஸ்ட ஷஃபுள் பண்ண முடியாது, அது பாட்ற ஆடர்ல தான் பாட்டு கேட்க முடியும். இப்படியெல்லாம் ஒரு நாள் நம் திறன்பேசியின் திரையில் தோன்றும் போது தான், ஒரு இசை செயலிக்கு எவ்வளவு அடிமையாகிக் கிடக்கிறோம் என்றே உணரத் தொடங்கினோம். ஸ்பாடிஃபைக்கு முன்னால் பாடல்களை எப்படி கேட்டோம்? 90'ஸ் கிட்டுகளைக் கேட்டால் டேப்ரெக்கார்டர், டிவிடி ப்ளேயர் என்று ஆரம்பித்து ஏகப்பட்ட சாதனங்களை லிஸ்ட் போடுவார்கள் என்பதால் டுகே கிட்டுகளிடம் நேராகச் சென்று விடலாம். பல டுகே கிட்டுகளுக்கு முதன் முதலில் பாடல்களைக் கேட்ட அனுபவம் தொலைக்காட்சியிலேயே இருந்திருக்கும். மெமரி கார்டுகள் போட்டுக்கொள்ளும் வசதியுள்ள செல்பேசிகளின் வருகைக்குப் பிறகு இளையராஜா ஹிட்ஸ், ரஹ்மான் ஹிட்ஸ் என்று மொத்தமாக ஏற்றி பாடல்களைக் கேட்கத் தொடங்கினோம்.செல்பேசியிலேயே பாடல்களைக் கேட்கும் வசதி இருந்ததால் பாடல்களைக் கேட்பதற்கென்று தனி சாதனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. டிவிடிகளும் பென்ட்ரைவாகச் சுருங்கின. திறன்பேசிகளின் வருகைக்குப் பிறகு திருட்டுத்தனமாக பாடல்க...