Skip to main content

Posts

Showing posts from December, 2024

மறுபடியும்

இன்று காலை, ஒரு திரைப்படம் பார்த்தேன். "மறுபடியும்". ஏனோ இந்தப் படத்தைப் பற்றி கொஞ்சம் எழுதலாம் என்று தோன்றியது. 2024ல் இப்படம் வெளியாகியிருந்தால், வரவேற்பை பெற்றிருக்குமா என்று தெரியவில்லை. இன்றைய தேதிக்கு அடித்து தேய்த்த பழைய கதைதான். திருமணத்தைத் தாண்டிய உறவில் இருக்கும் கணவன். மனைவி என்ன செய்கிறாள்? தொலைக்காட்சி தொடர்களில் இந்தக் கதைதான் தினமும் ஓடிக்கொண்டிருக்கிறது. அன்றைய தேதியிலும் பல கமர்ஷியல் படங்களிலும் கூட இதே கதை பலவாறு கையாளப்பட்டிருக்கும். திருமணத்தைத் தாண்டிய ஆண்-பெண் உறவை "சதிலீலாவதி"யில் நகைச்சுவையாகக் கையாண்ட பாலுமகேந்திரா, "மறுபடியும்"ல் ஆழமாகவும் உணர்வுபூர்வமாகவும் கையாண்டுள்ளார்.  1982 ம் ஆண்டு இந்தியில் வெளியான "அர்த்" திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான "மறுபடியும்" 1993 ல் வெளியாகியது. படத்தில் இடம்பெற்றிருக்கும் நடிகை யார்? அந்த இயக்குநர் பாலுமகேந்திரா தானே என்றெல்லாம் கற்பனையை ஓட்டாமல், ஒரு திரைப்படமாக மட்டுமே பார்த்தால் நலம்.  "கவிதா உனக்கொன்னு தெரியுமா? நம்ம சாஸ்தரத்துல சொல்லிருக்கு. பொண்டாட்டிங்கறவ தம் புருஷ...

முதல் ரயில் பயணம்

  கல்லூரி முடிக்கும் வரை தனியாகப் பேருந்து கூட ஏறியதில்லை. பக்கத்து தெருவிற்குச்  செல்வதனால் கூட உடன் யாரேனும் துணைக்கு வருவர். முதல் முறை தனியாகப் பயணம் செய்ய ஆசை வந்தது. கடந்த ஆண்டு எஸ்.எஸ்.சி தேர்விற்கான தேர்வு மையம் கோவையில்  அமைந்தது. வீட்டில் அனுமதி வாங்கச் சரியானக் காரணமாக அமைந்தது. ரயிலில் பயணம் செய்யலாம் என்று முடிவெடுத்தேன். அதற்கு முன்னர் ரயிலில் பயணித்ததில்லை. பயணச்சீட்டு முன்பதிவிலிருந்து எங்கு நிற்க வேண்டும், எங்கே இறங்க வேண்டும் என்பது வரை தோழிதான் பார்த்துக் கொண்டாள்.  தனியாகப் பயணித்தால் எப்படியிருக்கும் என்ற ஆர்வத்துடன்  ஆரம்பித்தது, என்னுடைய சேலம் - கோவை, 3 மணி நேர ரயில் பயணம் . எதையாவது அறிவித்துக் கொண்டிருக்கும் ஒலிபெருக்கி,  திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்குச் செல்லும் குடும்பத்தினர், வந்து நிற்கும்  ரயில்களில் , ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கும் வட மாநிலத்தவர்கள், 'ச்சாய்', 'சம்சே' என்று கூவிக்கொண்டே கூட்டத்தில்  லாவகமாக  உள்ளே சென்று வெளியே வரும் விற்பனையாளர்கள்,  தினசரி பயணம் மேற்கொள்ளும் அலுவலர்கள் , ரீல்ஸ் ...

சாத்தானின் கடவுள்- பா.ராகவன்

  கடவுள்னா யாரு? எங்க இருக்காரு? எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்றாங்களே, உண்மையிலே மேல தான் இருக்கானா? இல்ல கீழ, சைட்லனு, எங்கதான் இருப்பான்? மொதல்ல, அந்த 'இருப்பான்'ன்றதே இருப்பானா, இருக்காளா, இல்ல இருக்குதா?  காக்கா, குருவி, ஈ, எறும்பு, நாய், பூனைனு அதுங்களுக்கும் நமக்கு மாரியம்மா, காளியம்மானு ஒவ்வொன்னுத்துக்கும் ஒவ்வொரு கடவுள் இருக்குற மாதிரி தனித்தனியா கடவுள் இருந்து, சாமி கும்பிட்டு வேண்டிக்குங்களா என்ன? கடவுள் என்னும் கருத்துரு, ஒரு மனிதனுக்கு அறிமுகமாவதிலிருந்து இது போன்று நூற்றுக்கணக்கான கேள்விகள். எழாத ஆளில்லை, நாளில்லை. யார்தான் இதற்கெல்லாம் பதில் கூறுவர்?  இன்றைய நாளில் எதற்கும் வரலாறு எழுதப்படாமல் இல்லை. பா. ராகவனே உணவின் வரலாறு, ஆர். எஸ். எஸ் வரலாறு, காஷ்மீர் வரலாறு, இராமானுஜர் வரலாறென்று எக்கச்க்கமாக எழுதியிருக்கிறார். அப்படியிருக்க, கடவுளின் வரலாறை ஒருவர் எழுத முடியுமா? கடவுளை அடைவதற்கான வழி தான் என்ன? அதைத்தான் காலங்காலமாக மதங்கள், இன்னபிற அமைப்புகளின் மூலம் ஆன்மீகவாதிகள் போதித்து வருகின்றார்களே. அப்படியிருக்க, பாரா என்ன விசேஷமாக சொல்லிவிடப் போகிறார் ...