Skip to main content

Posts

Showing posts from January, 2025

கனவு சீரிஸ்- 1 பசுபதியின் வளர்ப்புக் காளை

மதியதூக்கத்தில் ஒரு நீண்ட கனவு இன்று. கனவுகள் என்றுமே விசித்திரமானவை. ஏன் வருகிறது, எப்படி வருகிறதென்று தெரியாது. ஆனால் தூக்கத்தில் கனவை நல்ல 'அனுபவிப்போம்'. எது அனுபவிக்கிறதோ! எனக்குப் பெரும்பான்மை நேரங்களில் விழிப்பு வந்தவுடன் கனவு மறந்துவிடும். ஒரு சில கனவுகள் துணுக்குப் போல் ஏதாவது நியாபகம் இருக்கும். நம் நினைவுகளிலிருந்து தான் கனவுகள் தோன்றுகின்றன என்று பொதுவாக சொல்வதுண்டு. அந்த ஆராய்ச்சிக்குள் நான் இறங்கியதில்லை. ஆனால் பெரும்பாலான சமயங்களில் நான் மனதில் நினைப்பவை தான் கனவாக எனக்கு வரும். ஏதோவொரு சமயத்தில் ஒரு சின்ன சிந்தனை கீற்று மனதில் வந்திருக்கும். உறக்கத்தின்போது கனவில் அன்று பெரிதாக விரியும் அது.   எனக்கு வரும் கனவுகளில் அதிகமானவை, எங்காவதொரு இடத்தில் மாட்டிக்கொள்வேன். ஏதாவது பாழடைந்த வீடு, கோயில், எந்த இடமென்றே தெரியாது.  மாட்டிக்கொண்டு வெளியில் வருவேன் என்றெல்லாம் இல்லை. ஆனால் வெளியில் வருவதற்கு போராடிக் கொண்டிருப்பேன். கனவா நிஜமா என்றே தெரியாமல் பயத்தில் கத்துவது, அழுவதெல்லாம் உண்டு. எங்கேயோ மாட்டிக்கொண்டிருப்பதையே  மறந்து கனவில் வேறொரு கதைக்கு தாவிச் ச...

வாராணசி - பா. வெங்கடேசன்

  பா. வெங்கடேசனின் 'வாராணசி' வாசித்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தோழி ஒருத்திக்கு வித்தியாசமாக ஏதாவதொரு நாவல் பரிசளிக்கலாமென்று தேடி பா. வெ வின்  'ராஜன் மகள்' வாங்கினேன். வாசித்துவிட்டு இனிமேல் இந்த ஆளுடைய நூல்கள் எதையுமே வாசிக்கக் கூடாதென்ற முடிவில் இருந்தேன். காரணம், நீருக்குள் முழ்கி ரோலர் கோஸ்டர் செல்வதாக இருந்த அவருடைய மொழிநடை. பித்துப்பிடித்துவிடுமே என்று அஞ்சி விலகியிருந்த நான் விதிவசத்தால் நான்கு நாட்களுக்கு முன்னர், வித்தியாசமாக ஏதாவது படிக்கலாமென்ற ஆர்வத்தில் மறுபடியும் ஒரு தற்கொலை முயற்சியாக 'வாராணசி' யை எடுத்துவிட்டேன். படித்தும் முடித்துவிட்டேன். அதைப்பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. பா. வெ வின் மொழிநடையில் சொற்கள் ஒரு சுழல் போன்று சுழல்பவை. கொஞ்சம் பிசகினாலும் அந்த மீளாச்சுழலில் சிக்கி நம்மை பிறழ்வுக்குட்படுத்துபவை.  சொற்களைப் பின்தொடர்ந்து செல்வதென்பது, படபடத்துக்கொண்டிருக்கும் ஒரு பட்டாம்பூச்சியைப் பின்தொடர்ந்து, மனிதத்தடம் படாத அடர்வனத்துக்குள் சிக்கி திரும்பிச் செல்ல வழி தெரியாமல் பீதியில் கலங்கி நிற்கும் சிறுவனின் நிலையைப் போன்றது. பா. ...