Skip to main content

Posts

Showing posts from February, 2025

நான் ஏன் என்னை ஜார்ஜாக உணர்ந்தேன்?

கடந்த வாரத்தில், ஓர் இரவில் மென்மையான இசை கேட்கும் ஆவலில் எஸ்தாஸ் தோனேவின் "13 Songs of Truth" ஆல்பம் கேட்க ஆரம்பித்து, அது "பிரேமம்" படத்தின்  பின்னணி இசைக்கோர்வையான "Unfinished Hope" ற்கு கொண்டு போய் விட்டது. அது எப்பொழுதும் போல் என்னுடைய பத்தாம் வகுப்பு நினைவுகளைக் கிளர்த்திவிட்டது. உடனே எனக்கு பிரேமம் படத்தை மறுபடியும் பார்க்க வேண்டும் என்ற உந்துதல் வந்து அன்றிரவே பார்த்தும் விட்டேன். அநேகமாக அப்படத்தை அன்று நான் பார்த்தது இருபதாவது முறையாக இருக்கலாம். அல்லது அதற்கு மேலாகக்கூட இருக்கலாம். இரவு நான் தூங்கச் சென்ற போது மணி பதினொன்று. இன்னும் எனக்கு தெளிவாக நினைவிலிருக்கிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுக்கு முந்தைய நாளிரவு, ஏதோவொரு லோக்கல் சேனலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிரேமம் படத்தை, தேர்வு முடிவுகள் குறித்த பயத்தை போக்கிக் கொள்வதற்காக பத்தரை மணிவரை உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். பிரேமம் படத்திற்கும் எனக்கும் இரவிற்கும் ஏதோ சம்மந்தம் இருக்கும் போல. முதன்முதலில் அப்படத்தைப் நான் பார்த்ததுகூட லேசாகத் தூறிக்கொண்டிருந்த ஒரு இரவு வேளையில்...

அ-காலம்- சாரு நிவேதிதா

சமகால அரபி இலக்கியம் குறித்து, 2021-ம் ஆண்டு, பிஞ்ச் செயலியில் சாரு நிவேதிதா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சாருவின் லெபனான் பயணத்தின் அனுபவக் கட்டுரைகளாக ஆரம்பித்து, இஸ்ரேல், சிரியா, பாலஸ்தீனம், அல்ஜீரியா, ஈராக், சவுதி,  எகிப்து என பல மத்திய தரைக்கடல் நாடுகளின் கலாச்சாரம், இசை, இலக்கியம் வழியாகப் பயணித்து ஒட்டுமொத்த அரேபிய வாழ்வின் சித்திரத்தை வரைந்துக் காட்டியிருக்கிறது இந்நூல்.  மனித குலம் தோன்றியதிலிருந்தே மறதி ஒரு பெரும் நோயாக இருந்திருக்கும் போல. அதனால் தான் பாறைகளில் கீற்றோவியங்கள் வரைந்து, மாபெரும் கட்டிடங்கள் எழுப்பி, பொதுவில் சிலைகள் வைத்து சில விஷயங்களை நினைவூட்டிக்கொள்ள முயன்றிருக்கிறான் மனிதன். பெய்ரூத்திலிருக்கும் குண்டுகள் துளைத்த கட்டிடங்கள், இன்னும் நூறு ஆண்டுகளுக்காவது லெபனானின் வன்முறை சுவடுகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். அதுவே அம்மக்களை இன்று அமைதி வழியில் தமது உரிமைகளுக்காகப் போராட வைத்திருக்கிறது.  கடவுளின் இருப்பு குறித்தான சந்தேகம் இந்நூலை வாசித்த பொழுது அதிகரித்தது. வாழ்க்கையே ஒரு போராட்டமாக, சாபமாக, உயிர்பிழைத்திருப்பதே பூர்வஜென்ம புண்...

கொட்டுக்காளி

'கொட்டுக்காளி' டிரெய்லர் பார்த்த போது என்னைப் பெரிதாகக் கவரவில்லை. பொதுவாக ஒரு திரைப்படத்தின் டிரெய்லர் பார்த்து, அந்தப் படம் எனக்கு ஒத்துவர வாய்ப்பிருக்கிறது என்று தோன்றினாலே படத்தை பார்ப்பேன். அதனால் கொட்டுக்காளிக்கு நல்ல விமர்சனங்கள் வந்திருந்தாலும் நான் படத்தை பார்க்கவில்லை. ஆனால் இரண்டு நாட்களாக என்னுடைய யூடியூப் ஃபீட் சும்மா சும்மா வந்து கொட்டுக்காளி சம்மந்தமான காணொளிகளையே காட்டிக்கொண்டிருந்ததால், சரி என்னதான் எடுத்திருக்கிறார்களென்று பார்த்துவிடலாம் என முடிவெடுத்து இன்று மதியம் படத்தைப் பார்த்தேன்.  வித்தியசாமாக ஏதோ முயன்றிருக்கிறார்கள். அவ்வளவே தோன்றியது எனக்கு. உடனே உனக்கு படம் பார்க்க தெரியவில்லை என்று ஓடி வரக்கூடாது. எப்படிப்பட்ட படமாக இருப்பினும் உணர்வுபூர்மாகக் காட்சிகளுடன் நம்மைப் பிணைக்க வேண்டும். அப்பொழுது தான் நம்மால் கதைக்குள் ஒன்ற முடியும். இல்லையெனில், ஏதோ ஓடுது, பார்த்தேன் என்பது போல் தான் இருக்கும். இந்தப் படத்தில் எந்தக் கதாப்பாத்திரத்துடனும் என்னால் ஒன்ற முடியவில்லை. படத்தை நாயகியின் (அன்னா பென்) வழியாகப் பார்ப்பதா, சூரியின் வழியாகப் பார்ப்பதா, இல்லை எதன...