கனவு- 1 இன்றைய மதிய வேளை தூக்கத்தில் ஒரு வினோதமான கனவு. எவருடைய வீடென்று தெரியவில்லை. எப்படியோ அவரின் வீட்டிற்குச் சென்றிருக்கிறேன். வீட்டிற்கு வெளியே திண்ணைக்கு அருகில் ஒரு சைக்கிளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அதன் ஹேண்டில் பாரில், உடலில் பெரும்பாலான பகுதிகளில் நீலமும் சில பகுதிகளில் கருமையும் கலந்த நிறத்தில் ஒரு சிறிய பறவை அமர்ந்திருக்கிறது. அழகாக இருக்கிறதே என்று அதனருகே சென்று அதனைத் தொட முயற்சிக்கிறேன். என்னவொரு ஆச்சரியம், அசையாமல் சிறு சினுங்களோடு அப்படியே அது இருக்கிறது. . சரி என்று அதன் முன் பக்கம் சென்று பார்த்தால். அதன் அலகு அகன்று திறந்திருக்கிறது. உள்ளே பார்த்தால், ஒரு பறவையின் கூடும் அதில் இரண்டு குஞ்சுகளும் விளையாடிக் கொண்டிருக்கின்றன. அந்த நொடியே அதிர்ச்சியில் தூக்கம் களைந்து எழுந்துவிட்டேன். திடீரென்று இப்படி ஒரு கனவு வந்திருக்கிறதே என்று நிதானத்திற்கு வந்த பிறகு யோசித்தேன். அது ஒன்றுமில்லை, இரண்டு நாட்களாக ஒரு காக்கையினால் துறத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் தங்கியிருக்கும் விடுதிக்கு அடுத்திருக்கும் அரசமரத்தில் ஒரு காக்கை கூடு கட்டி குஞ்சு பொரித்திர...