உலகம் முழுக்க வசூலில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிக்கும் “அப்செஷன்” திரைப்படத்தைக் காண பலரைப் போலவே நானும் ஆவலாய்க் காத்திருந்தேன். பலர் திரைப்படம் நன்றாக இருக்கிறது என்று கூறியதால் மட்டுமில்லை, திரைப்படத்தின் முன்னோட்டமும் என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தது. ஓர் இனிய பொழுதில் அப்படத்தைப் பார்த்தும் விட்டேன். படத்தைக் குறித்த என் கருத்துக்களை இனி காணலாம். அப்செஷனின் நாயகன் என்ன பெரிதாக ஆசைப்பட்டுவிட்டான். தன் காதலி இந்த உலகில் வேறெவர் மீதும் இல்லாத அளவிற்கு தன் மீது அன்பைப் பொழிய வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அவ்வளவுதான். ஆசைகளை நிறைவேற்றித் தரும் பொம்மை ஒன்று அவனுக்குக் கிடைக்க, அவனும் வேண்டிக் கொள்கிறான். அதற்கு பிறகு என்றாகிறது என்பது தான் மீதிக்கதை. இந்த ஒரு வரிக்கதை போதாதா, படம் சுவாரசியமாகச் செல்வதற்கு. ஆனால் அப்படி நிகழ்ந்ததா என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்வேன். படத்தின் ஒருவரிக் கதை சுவாரசியமானது தான். ஆனால் திரைக்கதையிலும் அதனை படமாக்கிய விதத்திலும் சொதப்பி விட்டார்கள். இந்த ஒருவரிக் கதையை இரண்டு விதமாக விரித்து எழுதியிருக்கலாம். ஒன்று. அடிப்படையில் இது ஒ...