Skip to main content

சாரு நிவேதிதாவின் இரு நூல்கள் வெளியீடு

அந்தோனின் ஆர்த்தோ-ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்



"தியேட்டர் ஆஃப் குருயல்டி", என்ற நாடகக் கோட்பாட்டை உருவாக்கிய ஃப்ரெஞ்ச் நாடகவியலாளர் அந்தோனின் ஆர்த்தோவை மையமாக வைத்து சாரு நிவேதிதா அவர்கள் எழுதியிருக்கும் நாடக நூல் வெளியாகியிருக்கிறது.

ஆர்த்தோவின் நாடகக் கோட்பாட்டின் மூலம்  உலகம் முழுவதும் இன்று நாடகங்கள் உருவாக்கப்படுகிறது. ஆனால் அவரை மையமாக வைத்து உருவாகியிருக்கும் நாடகங்கள் உலக அரங்கிலேயே மிகச் சொற்பம்தான். அவ்வகையில் தமிழில் வெளியாகியிருக்கும் முதல் நாடக நூல் இது.

ஆர்த்தோவைப் பற்றி அறியாதவர்களும் அவர் என்னவாக இருந்தார் என்பதை நாடகத்தில் உணர முடிகிறது. ஆர்த்தோவை உள்வாங்கி எழுதியிருக்கும் சாருவின் மொழிநடையில் நாமே ஆர்த்தோவாக உருமாறும் மாயம் நடந்துள்ளது.

ஐரோப்பா அழியப் போகிறது, இயற்கையிடம் சரணடையுங்கள் என்று எச்சரித்த கலைஞனை, மின்னதிர்ச்சி கொடுத்தே கொன்ற கொடூரத்தை அறிய மட்டுமல்லாமல், பொருளீட்டும் பேராசையில் இயந்திர கதியில் சென்றுக் கொண்டிருக்கும் நாம், நம் ஆன்மாவை இழக்காதிருத்தலின் அவசியத்தை உணர இந்நாடகத்தை வாசித்தல் அவசியமாகிறது.

நூல்              :அந்தோனின் ஆர்த்தோ-ஒரு    
                         கிளர்ச்சிக்காரனின் உடல்
விலை         : 120
வெளியீடு  : ஸீரோ டிகிரி பப்ளிஷிங்க்

புத்தகத்தை வாங்க:

Conversations with Aurangzeb:A Novel





2021ம் ஆண்டு பிஞ்ச் செயலியில் எழுதி கடந்த ஆண்டு வெளியான "நான்தான் ஔரங்ஸேப்" நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இது.

தமிழில் வெளிவந்த சமயத்திலேயே ஒரு சலசலப்பை நாவல் ஏற்படுத்தியிருந்தது. ஆங்கிலத்தில் நாவல் வெளிவரும் முன்னே இந்திய அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.

வரலாற்றை திரித்து, தங்களது கதையாடல்களுக்கேற்ப மாற்றியமைத்து மக்களைக் குழப்பும் வேலையில் பலர் ஈடுபட்டிருக்கும் தற்போதைய சூழலில் வரலாற்றை புனைவிற்கான களமாகக் கொண்டு ஆடியிருக்கிறார் சாரு நிவேதிதா.

ஔரங்ஸேபை வில்லனாகச் சித்தரித்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் சூழலில் அவரை நாயகனாக வைத்து எழுதியிருக்கும் இந்நூல், வரலாற்றின் பன்முகங்களை ஆராய்ந்து நோக்கும் அவசியத்தினை வலியுறுத்தும் வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.

சில கதாப்பாத்திரங்களைச் சேர்த்தும், திருத்தியும் செப்பனிட்டு ஆங்கில மொழிபெயர்ப்பில் வரும் அக்டோபர் 20ம் தேதி வெளிவரவிருக்கிறது. Invisible Men என்ற நூலை எழுதிய நந்தினி கிருஷ்ணன் அவர்களின் முதல் மொழிபெயர்ப்பு நூலும் இதுவே.


நூல்              : conversations with Aurangzeb: A Novel

விலை         : 599

வெளியீடு  : HarperCollins 

மொழிபெயர்ப்பு : நந்தினி கிருஷ்ணன்

புத்தகத்தை வாங்க:

Comments

Post a Comment

Popular posts from this blog

அ-காலம்- சாரு நிவேதிதா

சமகால அரபி இலக்கியம் குறித்து, 2021-ம் ஆண்டு, பிஞ்ச் செயலியில் சாரு நிவேதிதா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சாருவின் லெபனான் பயணத்தின் அனுபவக் கட்டுரைகளாக ஆரம்பித்து, இஸ்ரேல், சிரியா, பாலஸ்தீனம், அல்ஜீரியா, ஈராக், சவுதி,  எகிப்து என பல மத்திய தரைக்கடல் நாடுகளின் கலாச்சாரம், இசை, இலக்கியம் வழியாகப் பயணித்து ஒட்டுமொத்த அரேபிய வாழ்வின் சித்திரத்தை வரைந்துக் காட்டியிருக்கிறது இந்நூல்.  மனித குலம் தோன்றியதிலிருந்தே மறதி ஒரு பெரும் நோயாக இருந்திருக்கும் போல. அதனால் தான் பாறைகளில் கீற்றோவியங்கள் வரைந்து, மாபெரும் கட்டிடங்கள் எழுப்பி, பொதுவில் சிலைகள் வைத்து சில விஷயங்களை நினைவூட்டிக்கொள்ள முயன்றிருக்கிறான் மனிதன். பெய்ரூத்திலிருக்கும் குண்டுகள் துளைத்த கட்டிடங்கள், இன்னும் நூறு ஆண்டுகளுக்காவது லெபனானின் வன்முறை சுவடுகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். அதுவே அம்மக்களை இன்று அமைதி வழியில் தமது உரிமைகளுக்காகப் போராட வைத்திருக்கிறது.  கடவுளின் இருப்பு குறித்தான சந்தேகம் இந்நூலை வாசித்த பொழுது அதிகரித்தது. வாழ்க்கையே ஒரு போராட்டமாக, சாபமாக, உயிர்பிழைத்திருப்பதே பூர்வஜென்ம புண்...

வாராணசி - பா. வெங்கடேசன்

  பா. வெங்கடேசனின் 'வாராணசி' வாசித்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தோழி ஒருத்திக்கு வித்தியாசமாக ஏதாவதொரு நாவல் பரிசளிக்கலாமென்று தேடி பா. வெ வின்  'ராஜன் மகள்' வாங்கினேன். வாசித்துவிட்டு இனிமேல் இந்த ஆளுடைய நூல்கள் எதையுமே வாசிக்கக் கூடாதென்ற முடிவில் இருந்தேன். காரணம், நீருக்குள் முழ்கி ரோலர் கோஸ்டர் செல்வதாக இருந்த அவருடைய மொழிநடை. பித்துப்பிடித்துவிடுமே என்று அஞ்சி விலகியிருந்த நான் விதிவசத்தால் நான்கு நாட்களுக்கு முன்னர், வித்தியாசமாக ஏதாவது படிக்கலாமென்ற ஆர்வத்தில் மறுபடியும் ஒரு தற்கொலை முயற்சியாக 'வாராணசி' யை எடுத்துவிட்டேன். படித்தும் முடித்துவிட்டேன். அதைப்பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. பா. வெ வின் மொழிநடையில் சொற்கள் ஒரு சுழல் போன்று சுழல்பவை. கொஞ்சம் பிசகினாலும் அந்த மீளாச்சுழலில் சிக்கி நம்மை பிறழ்வுக்குட்படுத்துபவை.  சொற்களைப் பின்தொடர்ந்து செல்வதென்பது, படபடத்துக்கொண்டிருக்கும் ஒரு பட்டாம்பூச்சியைப் பின்தொடர்ந்து, மனிதத்தடம் படாத அடர்வனத்துக்குள் சிக்கி திரும்பிச் செல்ல வழி தெரியாமல் பீதியில் கலங்கி நிற்கும் சிறுவனின் நிலையைப் போன்றது. பா. ...

நகரம்(சிறுகதை)- சுஜாதா

வாசிப்பை நேசிப்போம் குழுவினர், எழுத்தாளர் அபிலாஷ் சந்திரனின் தலைமையில் “இலக்கிய விமர்சனம் எழுதும் கலை: வாசிப்பில் இருந்து எழுத்து வரை” எனும் தலைப்பில் இணைய வழியில் நடத்திய பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொண்டது நல்ல அனுபவமாக இருந்தது. மதிப்புரைகள் எழுதுவது எவ்வாறு என்றொரு விரிவுரையாக இல்லாமல் பங்கேற்பாளர்களுக்கு சின்ன சின்ன இடுபணிகள் கொடுத்து, அதன் மூலம் மதிப்புரைகளின் ஆரம்பப் புள்ளியிலிருந்து இறுதி வடிவத்தை அடைவது வரை சுவாரசியமாகக் கொண்டு சென்றார் அபிலாஷ். ஒரு கதையின் ஒவ்வொரு பத்தியையும் கட்டுடைப்பு செய்து எவ்வாறெல்லாம் கேள்விகளை எழுப்பி அதனை நோக்கி மதிப்புரையை எழுதலாம் என்று அவர் கூறியது புதிதாக இருந்தது எனக்கு. எடுத்துக்காட்டிற்காக அவர் கொண்டு வந்திருந்த, சுஜாதாவின் 'நகரம்‌'‌ சிறுகதை குறித்து பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றதிலிருந்து அச்சிறுகதைக்கு என் மதிப்புரையை எழுதுகிறேன்.  கிராமத்திலிருந்து ஜுரத்தினால் பாதிக்கப்பட்ட தன்னுடைய பன்னிரண்டு வயது மகளை(பாப்பாத்தி) மதுரை நகரிலிருக்கும் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வள்ளியம்மாளுக்கு, அங்கு ஏற்படும் அனுபவங்களும் அவள் எ...