படம் வெளியான சமயத்தில் இருந்தே விமர்சனங்கள் நல்லபடியாக இருந்தமையால் ஒரு ஹைப்பில் ஓடிடியில் ரிலீஸ் ஆனதும் படத்தைப் பார்த்தாச்சு.திரைப்படத்தைப் பற்றி எழுதுவதற்கு திரைப்படக் கலையின் நுணுக்கங்களோ,கதை,திரைக்கதை வடிவமைப்பு போன்றவற்றைப் பற்றிய அறிவெல்லாம் கிடையாது. இத்தனை வருடங்களாக படங்கள் பார்க்கிறோம்,சரியோ தவறோ நமக்குத் தெரிந்ததை எழுதலாம் என்ற துணிவு இப்பொழுதுதான் வந்துள்ளது.அதனால் என் பார்வையில் படம் எப்படி இருந்தது என்று எழுதுகிறேன். விமர்சனங்கள் இருப்பின் கருத்துப்பெட்டியில் தெரிவிக்கலாம். கதை என்ன? பழனி நகராட்சியில் அலுவலராகப் பணியாற்றும் சித்தார்த்(ஈஸ்வரன்) இறந்த தன் அண்ணனின் மகள்,அண்ணியுடன் வசித்து வருகிறார்.தூய்மைப் பணியாளராகப் பணியாற்றும் நாயகிக்கும்(சக்தி) சித்தார்த்துக்கும் பள்ளிப் பருவத்தில் இருந்து காதல்.இடையில் ஒரு பிரிவு ஏற்பட்டிருந்ததற்கு ஒரு முன்கதை இருப்பதாகக் காட்டப்படுகிறது.தன் நெருங்கிய நண்பனின் அக்கா மகள்(பொன்னி) பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக,அந்தப் பழி சித்தார்த்தின் மீது விழுகிறது.அதனைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களும் சித்தார்த் எடுக்கும் முடிவுகளுமே கதை. பிடித்த விஷயங...