ஆர். அபிலாஷின் கல்வி சார்ந்த கட்டுரைகள் எனக்கு மிகவும் விருப்பமானவை. ஒரு கல்வியாளராக சமூகத்தின் பொதுப்புத்தியிலிருந்து விலகி நடைமுறை சார்ந்தும் தத்துவார்த்தமாகவும் கல்வி குறித்து அவர் வைக்கும் வாதங்கள் முக்கியமானவை. தமிழகத்தில், கல்வி குறித்தான விவாதங்களில், அதன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை வாதங்களாக எதிர்கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு எதிர்தரப்பினர் செய்யும் ரொமாண்டிஸைஸத்துக்குப் பின்னால் இருக்கும் காரணங்களை ஆராய்வதும் கேள்விக்குள்ளாக்குவதன் அவசியங்களைக் கூறுவதுமே இந்நூலின் சாராம்சம். ஆங்கில ஹிந்துவில் வெளியான நடுப்பக்கக் கட்டுரை ஒன்றை முன்வைத்து கல்வி எவ்வாறு பணத்தைக் கடந்த அதிகார மதிப்பை கொண்டுள்ளது, தேர்வுமுறைக்கும் சாதி அதிகாரத்திற்கும் இருக்கும் தொடர்பு, அதன் பொருட்டு ஏன் மக்களால் கல்வி பட்டங்களைப் பெறுவதில் இருந்து தப்பிக்க இயலாது என்று விளக்கியிருக்கும் ‘கல்விப் பண்ணைகளால் உருவான புதிய இந்தியா’ கட்டுரை முக்கியமானது. கல்வி என்பது நிச்சயமாக இன்று வியாபாரம் தான். கல்வி இலவசமாக இருந்த பொழுது இல்லாத பிரச்சனை இப்பொழுது என்னவெனில், இத்தனை லட்சங்களைச் செலவழித்...
சென்னைப் புத்தகக் காட்சிக்குச் செல்ல வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாளைய விருப்பப்பட்டியலில் ஒன்றாக இருந்தது. இம்முறை சென்னையில் இருந்ததால் அது நிறைவேறிவிட்டது. வருடாவருடம் புத்தக விற்பனையை டெல்லி அப்பளக் கடையோடு ஒப்பிட்டு பலர் எழுதும் பதிவுகளை வாசித்து வாசித்து YMCA மைதானத்துக்குள் நுழைந்ததும் கண்கள் முதலில் டெல்லி அப்பளக் கடையையே தேடியது. ஈ மொய்க்கிற கூட்டம் தான். முன்னரே என்னென்ன புத்தகங்கள் வாங்கலாம் என்றொரு பட்டியல் வைத்திருந்து அதன் அடிப்படையில் பதிப்பகங்களின் அரங்கிற்குச் சென்றேன். முதலில் சென்றது ஸீரோ டிகிரிக்கு தான். சாரு இருக்கிறாரா என்று பார்த்தேன். இல்லை. வந்துவிடுவார் என்றார்கள். அவரின் மொத்த நூல்களையும் நேரில் பார்த்த பொழுது, என்று நாம் இதையனைத்தும் வாசித்து முடிக்க என்று மலைப்பாய் இருந்தது. அவரின் புதிய வரவான ‘இஞ்சி சுக்கு கடுக்காய்’ வாங்கினேன். பா. ராகவனின் மொத்த நூல்களும் இருந்தன. அவற்றின் வடிவ அளவுகள் ஆச்சரிப்படுத்தின. ஆர். அபிலாஷின் 'படித்துதான் ஆகணுமா?' வாங்கினேன். ஒரு சுற்று சுற்றிவிட்டு திரும்பி வரலாம் என்று கிளம்பினேன். தேசாந்திரி பதிப்பகத்தில் எஸ். ...