என்ன பாத்து யாருமே அப்பிடி சொன்னதில்ல. நீதான் மொத தடவ அப்பிடிலாம் சொல்ற. எனக்கு எவ்ளோ ஹர்டிங்கா இருக்கு தெரியுமா?
........
சொல்ல போனா, உன் ப்ராப்ளம் என்ன தெரியுமா? உன்ன மாதிரியே மத்தவங்கள மாத்த ட்ரை பண்றது. உலகத்துல இருக்க ஒவ்வொரு ஜீவராசியும் தனித்துவமானது. ஒருத்தங்க மாதிரியே இன்னொருத்தங்க இருந்துட்டா உலகம் என்னாகுறது? நீ என்ன மாத்த ட்ரை பண்ற.
இல்ல, நான் உன்ன மாத்தலாம் எதும் ட்ரை பண்ல. நான்….
நோ நோ. நீ அதான் பண்ற. என்ன மாதிரி உன்ன மாற சொன்னா உன்னால அது முடியுமா? என் கழுத்த புடிச்சு யாரோ நெறிக்கற மாதிரியே இருக்கு எப்பவும். யூ நோ, ஹௌ ஸ்ட்ரெஸ்ஃபுல் இட் இஸ்?
நீ சின்ன விஷயத்த பெருசு பண்ற. நான் சொன்னது எல்லாமே ரொம்ப சாதாரண விஷயங்க. அத எதுக்கு இவ்ளோ டீப்பா உன் மைன்ட்கு….
ப்ளீஸ். எது சின்ன விஷயம்? உனக்கு புரியுதா இல்லையா? நான் ரொம்ப பொறுமையா பேசிட்ருக்கேன். நான் நானா இருக்க முடியல இந்த ரூம்ல.
ஏய். இது ரொம்ப பெரிய கம்ப்ளெய்ன்ட் என் மேல.
எல்லாம் ஓ.கே. இது வர நடந்தது எல்லாம் கூட ஒரு வகைல என் நல்லதுக்கு தான் நீ சொன்னன்னு எடுத்துக்குறேன். ஆனா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்தது? நீ என்ன சர்வைலன்ஸ் பண்ற. நான் என்ன ஜெயில் கைதியா? இருவத்தி நாலு மணி நேரமும் நான் என்ன பண்றேன்னு பாத்து என்கிட்ட குத்தமா கண்டுபுடிக்கிற.
எதுக்கு இப்பிடிலாம் என்னென்னமோ பேசுற? சீரியசா சொல்லு. நான் அப்புடியா உன் கிட்ட நடந்துக்குறேன்?
அப்பிடிதான் நடந்துக்குற. அத தான் நான் இவ்ளோ நேரமா சொல்லிட்டுருக்கேன்.
சரி. அப்டின்னா நானும் தான இந்த ரூம்ல இருக்கேன்.
ஹான். ஹப்பபா. வந்தீயே பாயின்டுக்கு. அதே தான். நானும் இந்த ரூம்ல தான் இருக்கேன். நீ என்ன கன்ட்ரோல் பண்ண ட்ரை பண்ற செந்தமிழ். அவ்ளோதான் மேட்டர்.
......
இன்னிக்கு அப்டி என்ன நடந்துருச்சு? சாப்டுட்டு ஒரு தோச மீந்துருச்சு. ரூம்ல இருக்க டஸ்ட்பின்ல போட்டுட்டு, வாஷ் பண்ணிட்டு வந்து பாக்குறேன். ஐ வாஸ் ஷாக்டு. டஸ்ட்பின்னயே உத்து உத்து பாத்துட்ருக்க நீ.
ஏய். ஃபுட் வேஸ்ட்ட எதுக்கு ரூம்ல போடற? ஸ்மெல் வராதா?
நான் என்ன டெய்லியுமா போடறன்? ஆல்ரெடி ஐ வாஸ் ஃப்ரஸ்ட்ருவேட்டட் த்ரூ த ஃபோன் கால் வித் மை மம் அன்ட் டேட். ஏதோ ஒரு நாள் போட்டுட்டேன். அதுக்கு அப்பிடி பாப்பியா டஸ்ட்பின்ன. யூ நோ, ஹௌ ஐ ஃபெல்ட் கில்டி வித் தட் லுக்?
நீ ஆபிஸ் போயிட்ற. ரூம் க்ளீன் பண்ண வர்றவங்க என்ன தான் கேக்குறாங்க. ஏன் ரூம்ல ஃபுட் வேஸ்ட் போடுறீங்க, ஏன் இவ்ளோ குப்ப போடுறீங்கன்னு.
ஹே, ஆக்சுவலி ஏன் சென்னைல இருக்க பி.ஜிஸ்லாம் இவ்ளோ ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் பண்றாங்க. நான் பேங்களூர்ல டூ இயர்ஸ் இருந்துருக்கன். அங்க பி.ஜில என்ன யாருமே எதுக்குமே ரெஸ்ட்ரிக்ட் பண்ணதில்ல.
ப்ச். நேத்துலாம் கூட்ட வர அக்கா கிட்டதட்ட அழுதுட்டாங்க தெரியுமா? உன் காட்கு அடிலேந்து ரெண்டு கை நெறையா முடி எடுத்தாங்க. நீ தல சீவும்போது உன் தலைலேந்து விழற முடிய நீயே எடுத்து போடுன்னு சொல்றதுக்கு பேரு கன்ட்ரோல் பண்றதா?
நான் எத்தன தடவ சொல்றது, தட் இஸ் மை ஹேர்ஃபால். நான் என்ன என் தலைலேந்து முடிய பிச்சு போடறேனா. அதுவா விழுறதுக்கு நான் என்ன பண்றது? எல்லாத்தையும் ஸூம் லென்ஸ் வச்சு பாப்பியா?
இங்க பாரு, கூட்ட வர்றவங்க சொன்னாங்க. அததான் நான் சொன்னன்.
ஹே, ரூம் குப்பையா இருக்கு குப்பையா இருக்குன்னா என்னா அர்த்தம். ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் கூட்றதுக்கு தான அவங்க வர்றாங்க. அதுதான அவங்க வேல. எல்லாமே நீட்டா இருக்கனும்னு எதிர்பாத்தா அவங்க எதுக்கு இந்த வேலைக்கு வர்றாங்க.
அவங்களும் மனுஷங்க தான. நம்மளும் கொஞ்சம் பொறுப்பா இருக்குனும்ல.
போ செந்தமிழ். பூமர் மாதிரி பேசாத. அதுக்கு தான ரென்ட் பே பண்ற.
.......
ம்ம்ம்… அன்னிக்கு அப்டிதான். ஆபிஸ் முடிச்சுட்டு ரூம்கு வரும்போது ஏதோ டையர்ட்ல ஸ்லிப்பர்ஸ ஃபோர்சா விட்டுட்டேன். அது உன் காட் கிட்ட வந்திருச்சு. அன்னிலேந்து ஸ்லிப்பர்ச ஒழுங்கா விடுன்னு கமான்ட் பண்ற.
யூ நோ. ஹௌ ஹெக்டிக் டே தட் வாஸ். ஆல்ரெடி ஐ ஹேவ் டூ மெனி ப்ரஷர்ஸ். இதுல இது வேற. அன்னிலேந்து, தினம் ரூம்கு வரும்போது செந்தமிழ் என்ன சொல்லுவாளோன்னு பயந்துட்டே, உன்ன மைன்ட்ல வெச்சிட்டே எல்லாத்தையும் பண்ண வேண்டியதா இருக்கு.
நான் இனிமே எதுவுமே உன்ன சொல்லல. போதுமா.
பாத்தீயா… நான் ப்ராப்ளம ரிசால்வ் பண்ணனும்னு பேசுறேன். நீ எப்பிடி பேசுறன்னு.
சரி, அதுலாம் விடு. வாஷ்ரூம்ல மட்டும் குளிச்சிட்டு வெளீல வரும்போது உன் ட்ரெஸ்ஸ எடுத்துட்டு வந்துடு. நானும் குளிக்கனும்ல. டாய்லெட் ஃப்ளஷ் மேலயே ட்ரஸ்ஸ போட்டு வெக்கிற.
இந்த மன்த் நான் எவ்ளோ பிஸி தெரியுமா. எப்பவும் எதாச்ச என் மைண்ட்ல ஓடிட்டே இருக்கு. நான் மறந்துடுறேன். ஒரு நாள் மாதிரி எல்லா நாளும் இருக்காது புரிஞ்சுக்கோ.
நான் கேட்டதுக்கு இது பதில் இல்லையே.
நீ ஏன் என்ன உன்ன மாதிரி ஒரு பர்ஃபக்ஷனிஸ்டா மாத்தனும்னு ட்ரை பண்ற. எல்லாத்தையும் இப்டி பண்ணு அப்டி பண்ணுனு என்ன ரெஸ்ட்ரிக்ட் பண்ற. இதுக்கு முன்னாடி ஒரு ரூம்மேட் சந்திரமுகி பங்களா மாதிரி ரூம் வெச்சிருந்தாங்கனு சொன்னீயே, அவங்க கிட்ட ஏதாச்ச சொன்னீயா. நான் ஃப்ரண்ட்லியா இருக்கன்னு தான இப்டி பண்ற.
.......
ஆக்சுவலி செந்தமிழ், யூ ஆர் எ வெரி குட் ரூம்மேட். ஐ வான்ட் டு மெயின்டெயின் எ குட் ரிலேஷன்ஷிப் வித் யூ. அதனால தான் உன்கிட்ட இவ்ளோ பொறுமையா பேசிட்ருக்கேன். வேற யாராச்சன்னா இவ்ளோ நேரம் ரூம் மாத்திட்டு போயிருப்பேன்.
.........
ஐ ம் ஏன் இம்பர்ஃபக்ஷனிஸ்ட். சோ வாட். ஆக்சுவலி, எங்கம்மாப்பா, அண்ணாலாம் என்னோட இந்த இம்பர்ஃபக்ஷன, சைல்டிஷ்னச ரசிப்பாங்க தெரியுமா. அவங்க என்னிக்குமே என் மேல எந்த கம்ப்ளெய்ன்ட்டும் வெச்சதில்ல. என்ன எதுக்குமே எதுவுமே சொன்னதில்ல. நான் எப்பிடி இருக்கேனோ அப்பிடியே என்ன ஏத்துகிட்டாங்க. ட்ரை டு அக்சப்ட் மீ ஆஸ் ஐ ஆம்.
..........
அதுனாலதான் எனக்கு அரேன்ஜ் மேரேஜ் செட் ஆகாதுங்கறேன். நான் எப்பிடி இருக்கேனோ, என் சைல்டிஷ்னசோட அப்டியே ஏத்துக்குற ஒருத்தன் தான் எனக்கு வேணும்.
ஐ ப்ரே ஃபார் ஹிம்.
Comments
Post a Comment