இன்று காலை, ஒரு திரைப்படம் பார்த்தேன். "மறுபடியும்". ஏனோ இந்தப் படத்தைப் பற்றி கொஞ்சம் எழுதலாம் என்று தோன்றியது. 2024ல் இப்படம் வெளியாகியிருந்தால், வரவேற்பை பெற்றிருக்குமா என்று தெரியவில்லை. இன்றைய தேதிக்கு அடித்து தேய்த்த பழைய கதைதான். திருமணத்தைத் தாண்டிய உறவில் இருக்கும் கணவன். மனைவி என்ன செய்கிறாள்? தொலைக்காட்சி தொடர்களில் இந்தக் கதைதான் தினமும் ஓடிக்கொண்டிருக்கிறது. அன்றைய தேதியிலும் பல கமர்ஷியல் படங்களிலும் கூட இதே கதை பலவாறு கையாளப்பட்டிருக்கும். திருமணத்தைத் தாண்டிய ஆண்-பெண் உறவை "சதிலீலாவதி"யில் நகைச்சுவையாகக் கையாண்ட பாலுமகேந்திரா, "மறுபடியும்"ல் ஆழமாகவும் உணர்வுபூர்வமாகவும் கையாண்டுள்ளார். 1982 ம் ஆண்டு இந்தியில் வெளியான "அர்த்" திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான "மறுபடியும்" 1993 ல் வெளியாகியது. படத்தில் இடம்பெற்றிருக்கும் நடிகை யார்? அந்த இயக்குநர் பாலுமகேந்திரா தானே என்றெல்லாம் கற்பனையை ஓட்டாமல், ஒரு திரைப்படமாக மட்டுமே பார்த்தால் நலம். "கவிதா உனக்கொன்னு தெரியுமா? நம்ம சாஸ்தரத்துல சொல்லிருக்கு. பொண்டாட்டிங்கறவ தம் புருஷ...