உலகிலேயே தலைசிறந்த உறவு எது என்று உங்களைக் கேட்டால் எதைக் கூறுவீர்கள்? தாய், தந்தை மூலம் தான் நமக்கு உயிர் கிடைக்கிறது. தம்பி, தங்கை, அக்கா, அண்ணா எல்லாம் நம் இரத்தங்கள். தோழன், தோழிகளெல்லாம் நாம் உருவாக்கிக் கொள்ளும் உறவுகள். எந்த இரத்த சம்பந்தமும் இல்லாமல் அவர்களுடன் பலகாலம் உறவாடுகிறோம். நம்மில் இருந்து உருவாகும் நம் குழந்தைகள் இருக்கிறார்கள். இதையெல்லாந்தாண்டி குரு என்றொருவர் இருக்கிறார். அவர் பெற்ற ஞானத்தையெல்லாம் நமக்கு அளிக்கிறார். இவர்கள் எல்லோருமே நம் வாழ்வில் முக்கியமானவர்கள் தாம். ஆனால், எந்த உறவுக்காக உங்கள் உயிரை தருவீர்கள்? அட, சும்மா பேச்சுக்கெல்லாம் எதையேனும் சொல்லக் கூடாது. ஜென்ம ஜென்மமா தாய் மகன் உறவு, தந்தைக்காக மகள் கட்டிய பாசக்கோட்டை, அண்ணணுக்காக தன் மூக்கை அறுத்து கொடுத்த தம்பி, தன் நட்பை ஏற்றுக்கொள்ளாத தோழியின் மீது ஆசிட் வீசி கொன்ற தோழன். இப்படியெல்லாம் எங்கேயாவது செய்திகள் வெளியாகி கேட்டுள்ளோமா? எல்லா உறவையும் இயல்பாக ஏற்று, ஒத்துவரும்வரை ஒன்றாக இருந்து, பிடிக்கவில்லையெனில் விலகியோ தூக்கியெறிந்தோ செல்லும் நாம், இந்த எழவெடுத்த காதலில் மட்டும் ஏன் இவ்வளவு ...