Skip to main content

Posts

அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு

  முதல் முறை பெருநகரத்தில் வசிக்க நேர்ந்த பொழுது அன்பினால் சில இன்னல்களுக்கு ஆளானேன். நீ என்ன வேணாலும் செய்யலாம், எப்படி வேணாலும் இருக்கலாம் நான் உன் விஷயத்துல தலையிட மாட்டேன் . நீயும் என் விஷயத்தில் தலையிடக் கூடாது. நான் பிரியப்படும் நேரத்தில் நீ என்னுடன் இருக்க வேண்டும். ஆனால் நீ பிரியப்படும் நேரத்தில்  நான் உன்னுடன் இல்லை என்றால்  கோபித்துக் கொள்ளக் கூடாது . அப்படி செய்தால் அது அன்பு அல்ல. என் மனதை நீ புரிந்துக் கொள்ள வேண்டும் . ஆனால் நான் அப்படி இல்லை என்றால் கோபித்துக் கொள்ள கூடாது .அப்படி செய்தால் அது அன்பு அல்ல. நான் உன்னிடம் உரிமை எடுத்துக் கொள்வேன். ஆனால் நீ உரிமை எடுத்துக் கொள்ளக் கூடாது.  உரிமைக்  கோரினால் அது அன்பு அல்ல . "வாய்ஸ் ரீட் பண்ணாத..." "ஃபேஸ் ரீட் பண்ணாத..." இப்படி அறையில் தங்குபவரிலிருந்து வகுப்பில் உடன் படிப்பவர் வரை  சொல்லித் திரியும் ஐம்பது பேரையாவது கடந்து வந்திருப்பேன். அவர்களிடம் அன்பாக எவ்வாறு இருப்பதென்று என்னால் புரிந்துக் கொள்ளவே இயலவில்லை. கத்தி மேல் நடப்பது போல் எல்லா சமயங்களிலும் அவர்களின் நிலையைப் புரிந்து நடக்க வேண...

ஸ்பாடிஃபை எனும் அரக்கன்

இனிமே நெக்ஸ்ட் பட்டன அழுத்த முடியாது,  ப்ளேபேக் ஆப்ஷன் கிடையாது, ப்ளேலிஸ்ட ஷஃபுள் பண்ண முடியாது, அது பாட்ற ஆடர்ல தான் பாட்டு கேட்க முடியும். இப்படியெல்லாம் ஒரு நாள் நம் திறன்பேசியின் திரையில் தோன்றும் போது தான், ஒரு இசை செயலிக்கு எவ்வளவு அடிமையாகிக் கிடக்கிறோம் என்றே உணரத் தொடங்கினோம்.  ஸ்பாடிஃபைக்கு முன்னால் பாடல்களை எப்படி கேட்டோம்? 90'ஸ் கிட்டுகளைக் கேட்டால் டேப்ரெக்கார்டர், டிவிடி ப்ளேயர் என்று ஆரம்பித்து ஏகப்பட்ட சாதனங்களை லிஸ்ட் போடுவார்கள் என்பதால் டுகே கிட்டுகளிடம் நேராகச் சென்று விடலாம். பல டுகே கிட்டுகளுக்கு முதன் முதலில் பாடல்களைக் கேட்ட அனுபவம் தொலைக்காட்சியிலேயே இருந்திருக்கும். மெமரி கார்டுகள் போட்டுக்கொள்ளும் வசதியுள்ள செல்பேசிகளின் வருகைக்குப் பிறகு இளையராஜா ஹிட்ஸ், ரஹ்மான் ஹிட்ஸ் என்று மொத்தமாக ஏற்றி பாடல்களைக் கேட்கத் தொடங்கினோம்.செல்பேசியிலேயே பாடல்களைக் கேட்கும் வசதி இருந்ததால் பாடல்களைக் கேட்பதற்கென்று தனி சாதனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. டிவிடிகளும் பென்ட்ரைவாகச் சுருங்கின.  திறன்பேசிகளின் வருகைக்குப் பிறகு திருட்டுத்தனமாக பாடல்க...

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளும் 2018 தேர்தல் நினைவுகளும்

  ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகி நாடே பரபரப்பில் இருக்க, 'மிக்ஜாம்' புயல் சென்னையைத் தாக்கி ஒரு நாள் கூச்சலோடு, தமிழக ஊடகங்களை திசை திருப்பிவிட்டது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு வரும் மாநில தேர்தல்களை அரையிறுதி என்று சொல்லி அரசியல் நோக்கர்கள், ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே கட்டுரைகள் எழுதத் தொடங்குவதும் காட்சி ஊடகங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்து விவாதங்கள் வைத்து கத்தத் தொடங்குவதும் வழக்கம். தினமும் நாளிதழ்களைப் புரட்டும் பொழுதும், செய்தி சேனல்களை மாற்றும் பொழுதும், ''நாட்ல எலக்‌ஷனத் தவர வேற எதுவுமே நடக்கலயா? வேற ஏதாச்ச இருந்தா காட்டுங்கப்பா'' என்று தான் சலிப்பு தட்டும். அதனால், இந்த முறை தேர்தல் செய்திகள், கட்டுரைகள், அலசல்கள் என்று எதுவும் பார்க்காமல் நேரடியாக முடிவுகளுக்குப் பிறகு படித்துக் கொள்ளலாம் என்று முடிந்தவரை தவிர்த்திருக்கிறேன். இது, தேர்தலுக்கு முன்பு வரை எந்த வாய் என்னவெல்லாம் உருட்டியிருக்கிறது என்பதைத் தெரிந்துக் கொள்ளவும் உதவும் என்று நம்பினேன். ஊடகப் பரபரப்புகளுக்குள் செல்லாமல் இந்த தேர்தலை நோக்கிய என் அனுபவங்களையும் 2018ம்...

சித்தா-ஒரு பார்வை

படம் வெளியான சமயத்தில் இருந்தே விமர்சனங்கள் நல்லபடியாக இருந்தமையால் ஒரு ஹைப்பில் ஓடிடியில் ரிலீஸ் ஆனதும் படத்தைப் பார்த்தாச்சு.திரைப்படத்தைப் பற்றி எழுதுவதற்கு திரைப்படக் கலையின் நுணுக்கங்களோ,கதை,திரைக்கதை வடிவமைப்பு போன்றவற்றைப் பற்றிய அறிவெல்லாம் கிடையாது. இத்தனை வருடங்களாக படங்கள் பார்க்கிறோம்,சரியோ தவறோ நமக்குத் தெரிந்ததை எழுதலாம் என்ற துணிவு இப்பொழுதுதான் வந்துள்ளது.அதனால் என் பார்வையில் படம் எப்படி இருந்தது என்று எழுதுகிறேன். விமர்சனங்கள் இருப்பின் கருத்துப்பெட்டியில் தெரிவிக்கலாம். கதை என்ன? பழனி நகராட்சியில் அலுவலராகப் பணியாற்றும் சித்தார்த்(ஈஸ்வரன்) இறந்த தன் அண்ணனின் மகள்,அண்ணியுடன் வசித்து வருகிறார்.தூய்மைப் பணியாளராகப் பணியாற்றும் நாயகிக்கும்(சக்தி) சித்தார்த்துக்கும் பள்ளிப் பருவத்தில் இருந்து காதல்.இடையில் ஒரு பிரிவு ஏற்பட்டிருந்ததற்கு ஒரு முன்கதை இருப்பதாகக் காட்டப்படுகிறது.தன் நெருங்கிய நண்பனின் அக்கா மகள்(பொன்னி) பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக,அந்தப் பழி சித்தார்த்தின் மீது விழுகிறது.அதனைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களும் சித்தார்த் எடுக்கும் முடிவுகளுமே கதை. பிடித்த விஷயங...

தருமபுரி பூர்வ சரித்திரம்

சங்க கால ஆட்சியாளர்களான சேர, சோழ, பாண்டியர்களின் வரலாற்றை முழுமையாக அறிந்திருக்காவிடினும் தான் சார்ந்த பகுதி முற்காலத்தில் எந்த அரசின் ஆட்சிப்பகுதியாக இருந்திருக்கும் என்று தெரிந்துக் கொள்வதில் அனைவருக்கும் ஆர்வமிருக்கும். மதுரையைச் சுற்றியுள்ள மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் தங்களைப் பாண்டிய நாடு என்றும் தஞ்சையைச் சுற்றியுள்ள மாவட்டத்தினர் தங்களைச் சோழ நாடு என்றும் கோவையைச்  சுற்றியுள்ள மாவட்டத்தினர் தங்களைச் சேர நாடு, கொங்கு நாடு என்றும் வகைமைப்படுத்திக் கொள்வர். ஆனால் யாதொருவராலும் கண்டுகொள்ளப்படாத, ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள தருமபுரி மாவட்டத்தினர், நீங்களெல்லாம் எந்த அரசின் ஆட்சிப்பகுதியில் இருந்திருப்பீர்கள் என்று கேட்டால் உதட்டைப் பிதுக்குவார்கள். நாமெல்லாம் கடையெழு வள்ளல்களுள் ஒருவனான அதியமான் நெடுமான் அஞ்சியின் ஆட்சிப் பகுதியில் வருவோம், அவனது மூதாதையர்கள் சேர மரபைச் சார்ந்தவர்கள். அதனால் நாம் சேர மண்டலத்தைச் சார்ந்தவராக இருப்போம்,  அதியமான் சோழப் பேரரசின் கீழ் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கின்றன. அதனால் சோழ மண்டலமாக இருக்கலாம் மாவட்டத்தில் எத்தனை கல்வெட்டுகள் கன்னட...

சாரு நிவேதிதாவின் இரு நூல்கள் வெளியீடு

அந்தோனின் ஆர்த்தோ-ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல் "தியேட்டர் ஆஃப் குருயல்டி", என்ற நாடகக் கோட்பாட்டை உருவாக்கிய ஃப்ரெஞ்ச் நாடகவியலாளர் அந்தோனின் ஆர்த்தோவை மையமாக வைத்து சாரு நிவேதிதா அவர்கள் எழுதியிருக்கும் நாடக நூல் வெளியாகியிருக்கிறது. ஆர்த்தோவின் நாடகக் கோட்பாட்டின் மூலம்  உலகம் முழுவதும் இன்று நாடகங்கள் உருவாக்கப்படுகிறது. ஆனால் அவரை மையமாக வைத்து உருவாகியிருக்கும் நாடகங்கள் உலக அரங்கிலேயே மிகச் சொற்பம்தான். அவ்வகையில் தமிழில் வெளியாகியிருக்கும் முதல் நாடக நூல் இது. ஆர்த்தோவைப் பற்றி அறியாதவர்களும் அவர் என்னவாக இருந்தார் என்பதை நாடகத்தில் உணர முடிகிறது. ஆர்த்தோவை உள்வாங்கி எழுதியிருக்கும் சாருவின் மொழிநடையில் நாமே ஆர்த்தோவாக உருமாறும் மாயம் நடந்துள்ளது. ஐரோப்பா அழியப் போகிறது, இயற்கையிடம் சரணடையுங்கள் என்று எச்சரித்த கலைஞனை, மின்னதிர்ச்சி கொடுத்தே கொன்ற கொடூரத்தை அறிய மட்டுமல்லாமல், பொருளீட்டும் பேராசையில் இயந்திர கதியில் சென்றுக் கொண்டிருக்கும் நாம், நம் ஆன்மாவை இழக்காதிருத்தலின் அவசியத்தை உணர இந்நாடகத்தை வாசித்தல் அவசியமாகிறது. நூல்             ...