Skip to main content

Posts

கனவு சீரிஸ்- 2

கனவு- 1 இன்றைய மதிய வேளை தூக்கத்தில் ஒரு வினோதமான கனவு. எவருடைய வீடென்று தெரியவில்லை. எப்படியோ அவரின் வீட்டிற்குச் சென்றிருக்கிறேன். வீட்டிற்கு வெளியே திண்ணைக்கு அருகில் ஒரு சைக்கிளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அதன் ஹேண்டில் பாரில், உடலில் பெரும்பாலான பகுதிகளில் நீலமும் சில பகுதிகளில் கருமையும் கலந்த நிறத்தில் ஒரு சிறிய பறவை அமர்ந்திருக்கிறது. அழகாக இருக்கிறதே என்று அதனருகே சென்று அதனைத் தொட முயற்சிக்கிறேன்.  என்னவொரு ஆச்சரியம், அசையாமல் சிறு சினுங்களோடு அப்படியே அது இருக்கிறது. . சரி‌ என்று அதன் முன்‌ பக்கம் சென்று பார்த்தால். அதன் அலகு அகன்று திறந்திருக்கிறது. உள்ளே பார்த்தால், ஒரு பறவையின் கூடும் அதில் இரண்டு குஞ்சுகளும் விளையாடிக் கொண்டிருக்கின்றன. அந்த நொடியே அதிர்ச்சியில் தூக்கம் களைந்து எழுந்துவிட்டேன்.  திடீரென்று இப்படி ஒரு கனவு வந்திருக்கிறதே என்று நிதானத்திற்கு வந்த பிறகு யோசித்தேன். அது ஒன்றுமில்லை, இரண்டு நாட்களாக ஒரு காக்கையினால் துறத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் தங்கியிருக்கும் விடுதிக்கு அடுத்திருக்கும் அரசமரத்தில் ஒரு காக்கை கூடு கட்டி குஞ்சு பொரித்திர...

வெண்ணிற இரவுகள்- ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

  கையில் நூலெடுத்து வாசிப்பதற்கு ஒரு நாளில் ஒரு மணி கூட இல்லாத சமயத்தில், தஸ்தயேவ்ஸ்கியியை வாசிக்கலாம் என்ற திட்டமும் இல்லாமல், எப்படி வெண்ணிற இரவுகளை கையிலெடுத்து வாசிக்க ஆரம்பித்தேன் என்று தெரியவில்லை. பனி படர்ந்த ஆளரவமற்ற சாலையில், பத்தடி தூரத்தில் மங்கலான ஒளியில் ஒரு மனித உருவம் உங்களை நோக்கி வருகிறது. நெருங்க நெருங்க மெல்ல அதன் நடை, உருவத்தோற்றத்தில் ஏதோ ஓர் உள்ளார்ந்த பரிச்சயம் தெரிகிறது‌. எதிரில் நேருக்கு நேர் அதன் முகத்தைக் காண்கிறீர்கள். அச்சு அசப்பில் அது நீங்கள் தான். அந்தக் கணத்தில் எப்படியொரு  தாங்கொணா அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாவீர்கள். வெண்ணிற இரவுகளை வாசிக்கையில், அதன் நாயகன் தன் கதையைச் சொல்ல சொல்ல அப்படியொரு அதிர்ச்சியிலும் சொல்லவியலா ஏதோ ஓர் உணர்வாலும் பீடிக்கப்பட்டேன்.  சிறு வயதிலிருந்தே "வித்தியாசமானவள்" எனும் அடைமொழியைச் சுமந்து திரியும் எனக்கு(அப்படி திரிவதில் கொஞ்சம் பெருமையே ஆயினும்) நாம நெஜமாவே "அப்நார்மலோ" என்று பல முறை என்னை நானே சந்தேகித்து வருந்திய நாட்கள் உண்டு. அதை தகர்த்தெறிந்தது சாரு நிவேதிதாவின் "எக்ஸிஸ்டன்ஷியலிஸமு...

மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்க்- 2025ல் வாழும் 'யூத்' விஜய்

நீண்ட நாட்கள் கழித்து இன்று ஒரு திரைப்படம் பார்த்தேன். "மிஸ்டர்.ஹவுஸ்கீப்பிங்க்". எதேச்சையாக யூடியூபில் உலவும் போது கண்ணில் பட்டது. காட்சி துணுக்குகளாகவே முழுப்படமும் இருந்தது. இப்படத்தைத் காண என்னைத் தூண்டியது என்னவெனில், நான் பார்த்தது படத்தின் க்ளைமேக்ஸிற்கு முந்தைய காட்சி. படத்தின் நாயகன் புதுமுகம் போலிருந்தார். ஆனால் ஏனோ முதல் பார்வையிலேயே அவரை ஹீரோ என்று மனம் ஒப்புக்கொண்டுவிட்டது. அவரின் நடிப்பு ஒன்றும் ஆஹா ஓஹோ‌ என்றிருந்தது என்று சொல்லவரவில்லை. சில இடங்களில் உணர்ச்சிகளை‌ வெளிக்கொணர திணறினாலும்‌ சில இடங்களில் மிகைநடிப்பாக இருந்தாலும் ஓரளவிற்கு சமாளித்து மொத்த படத்தையும் ஒரு ஹீரோவாக தாங்குகிறார் என்றே‌ எனக்கு தோன்றியது. அவருக்காகவே அத்திரைப்படத்தைப் பார்த்தேன். காமெடி நன்றாகவே வருகிறது அவருக்கு. வரும் காலங்களில் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து, நடிப்பை மேம்படுத்திக் கொண்டால் ஹரிஷ் கல்யான், கவின், ரியோ ராஜ் வரிசையில் வருவார்.  படத்தின் கதை மிகவும் பழைய, எளிமையான கதைதான். கல்லூரி முடித்து வெட்டியாக திரியும் ஹீரோ, அவருக்கொரு காதல், அது நிறைவேறியதா என்பதுதான் கதை. இதற்கிடையில் ...

நகரம்(சிறுகதை)- சுஜாதா

வாசிப்பை நேசிப்போம் குழுவினர், எழுத்தாளர் அபிலாஷ் சந்திரனின் தலைமையில் “இலக்கிய விமர்சனம் எழுதும் கலை: வாசிப்பில் இருந்து எழுத்து வரை” எனும் தலைப்பில் இணைய வழியில் நடத்திய பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொண்டது நல்ல அனுபவமாக இருந்தது. மதிப்புரைகள் எழுதுவது எவ்வாறு என்றொரு விரிவுரையாக இல்லாமல் பங்கேற்பாளர்களுக்கு சின்ன சின்ன இடுபணிகள் கொடுத்து, அதன் மூலம் மதிப்புரைகளின் ஆரம்பப் புள்ளியிலிருந்து இறுதி வடிவத்தை அடைவது வரை சுவாரசியமாகக் கொண்டு சென்றார் அபிலாஷ். ஒரு கதையின் ஒவ்வொரு பத்தியையும் கட்டுடைப்பு செய்து எவ்வாறெல்லாம் கேள்விகளை எழுப்பி அதனை நோக்கி மதிப்புரையை எழுதலாம் என்று அவர் கூறியது புதிதாக இருந்தது எனக்கு. எடுத்துக்காட்டிற்காக அவர் கொண்டு வந்திருந்த, சுஜாதாவின் 'நகரம்‌'‌ சிறுகதை குறித்து பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றதிலிருந்து அச்சிறுகதைக்கு என் மதிப்புரையை எழுதுகிறேன்.  கிராமத்திலிருந்து ஜுரத்தினால் பாதிக்கப்பட்ட தன்னுடைய பன்னிரண்டு வயது மகளை(பாப்பாத்தி) மதுரை நகரிலிருக்கும் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வள்ளியம்மாளுக்கு, அங்கு ஏற்படும் அனுபவங்களும் அவள் எ...

கந்தகோட்டம்

சென்னை‌ பாரிமுனையில் அமைந்துள்ள கந்தகோட்டம் முத்துக்குமாரசுவாமி ஆலயத்திற்குச் சென்றிருந்தேன். நீண்ட நாளைய திட்டமெல்லாம் இல்லை. சென்னையில் இருக்கிறேன். அரைமணிநேரப் பயண தூரத்தில் இருக்கிறது. எப்பொழுதும் போல் இன்றும் ‘திடீரென்று’ தோன்றியதால் உடனே சென்றுவிட்டேன். இவ்வாலயம் குறித்து நான் அறிந்திருந்ததெல்லாம், இராமலிங்க அடிகளார், தன் ஒன்பதாம் அகவையில் முருகனால் ஆட்கொள்ளப்பட்டு தெய்வமணிமாலையை இயற்றியது இத்தளத்தில் தான். அச்செய்தி,  இக்கோவிலுக்குச் செல்வதில் ஒரு ஆவலை உண்டுபண்ணியிருந்தது.  இரவே இத்தளத்தைக் குறித்து கொஞ்சம் படித்து மனதில் கற்பனைகளை வளர்த்திருந்தேன். காலையில், சென்னை மத்திய இரயில் நிலையத்திலிருந்து 'கூகுள் மேப்ஸ்' போட்டு சுற்றும்முற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நடக்கலானேன். வழியிலெங்கும் சிறு சிறு இரும்புக் கடைகள், பாத்திரக் கடைகளாய் இருந்தன. கோவிலை நெருங்க நெருங்க சில செம்பிலான கலை வேலைப்பாடுகள் நிறைந்த பொருட்கள், பூஜை பொருட்கள் விற்கும் கடைகள் தென்பட்டன. கோவில் உள்ள தெருவென்று, மக்கள் சாலையை அங்கப்பிரதட்சண பாதை போலவா வைத்திருப்பார்கள். சென்னையின் இதர வழக்கமான முகம்ச...

ஓர் எரிச்சல் பதிவு

 “அந்த சோயாவ வெச்சி ஒன்னு செய்யும் பாருங்க…ஓட்டல் கூட தோத்துடணும். ஒம்பதாங் க்ளாஸ் தான் படிக்கிது. வீட்ல எல்லா வேலையும் செய்யும்‌. ஒடம்பு பெருசா இருக்கறதுக்கு காலைல ஓடிட்டு ஸ்கூல் போகும். கம்ப்யூட்டர் க்ளாஸ்லாம் போய்ட்டு ஏதோ அவார்டுலாம் வாங்கிருக்கு.” கண்ணில் அப்படி ஒரு பெருமை அந்த மூதாட்டிக்கு. வயது அறுபதை நெருங்கியிருக்கலாம்.  அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் அந்த இரண்டு பெண்மணிகளுக்கும் அவருக்கும் அதற்கு முன்னர் பழக்கம் இருந்தது போல் அவர்களின் உடல்மொழி இல்லை. பேருந்தில் அமர்ந்திருந்த ஐந்து நிமிட பழக்கமாகத்தான் இருந்திருக்க வேண்டும். அவர்களும், தன் பேத்தியைக் குறித்த பெருமிதத்தில் திளைக்கும் அந்த நெடிந்த, மெல்லிய தோற்றமுடைய அம்மூதாட்டியை உண்மையிலே ரசிப்பது போன்றதொரு பொய்யான பாவனையை காட்டிக் கொண்டிருந்தனர்.  அவரின் அருகில் இருந்த இன்னொரு நடுத்தர வயதுள்ள பெண்மணி இக்காட்சியைக் கண்டு, அப்பெருமிதங்களுக்கெல்லாம் சொந்தக்காரர் போல் நெளிந்துக் கொண்டிருந்தார். அம்மூதாட்டியின் மருமகளாக அவர்‌ இருப்பார் என்பது என் கணிப்பு. மூதாட்டி விட்டதும் அப்பெண்மணி தொடங்கலானார். “பை...